(Source: ECI/ABP News/ABP Majha)
Ajith vs Vijay: விஜயா.. அஜித்தா.. யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் சொல்வது இதுதான்!
அஜித் சூப்பர் ஸ்டாரா? இல்லை விஜய் சூப்பர் ஸ்டாரா? - பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் சொல்வது என்ன? - முழுமையாக விவரிக்கும் கட்டுரை தொகுப்பு!
சமூக வலைதளங்களில் இன்றைய டாக் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்பதுதான். வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில்,"விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் ,விஜய் யின் கடைசி ஆறு திரைப்படங்கள் ஹிட்டோ, ஃப்ளாப்பா.. ஆனால் சீரான வசூலை செய்துள்ளது: ஆகவே வியாபார ரீதியாக விஜய் தான் நம்பர் 1."என கூறினார்; இது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது. இதனால் அஜித் ரசிகர்கள் அஜித் தான் சூப்பர் ஸ்டார் என்றும் விஜய் ரசிகர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இருவரின் கடைசி ஆறு திரைப்படங்கள் வசூலித்த வசூல் தொகையை கணக்கிட்டு பார்த்து யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை கண்டுபிடிக்கலாம்;
அஜித்தின் படங்கள் வசூலித்த வசூல் விபரம்
அஜித்தின் கடைசி ஆறு படங்களான என்னைஅறிந்தால், வேதாளம்,விவேகம், விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அனைத்துமே நஷ்டமின்றி சீரான வசூலை செய்துள்ளது.
- கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளது.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான வேதாளம் திரைப்படம் 155 கோடி வசூல் செய்தது.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் 160 கோடி வசூல் செய்தது.
- மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது.
- பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான ' நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 181 கோடி வசூல் செய்தது.
- ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் 234 கோடி வசூல் செய்தது.
விஜய் படங்கள் வசூலித்த வசூல் விபரம்
விஜயின் கடைசி ஆறு படங்களான பைரவா,மெர்சல்,சர்கார்,பிகில்,மாஸ்டர்,பீஸ்ட் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை குவித்திருக்கிறது.
- பைரவா திரைப்படம் 114 கோடி வசூல் செய்தது.
- மெர்சல் திரைப்படம் 260 கோடி வசூல் செய்து சாதனைகளை படைத்தது.
- முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் பல சர்சைகளில் சிக்கினாலும் 252 கோடி வசூல் செய்தது.
- அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் 295 கோடி வசூல் செய்தது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதித்த போதிலும் 223 கோடி வசூல் செய்தது.
- நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற போதிலும் 250 கோடி வசூல் செய்தது.
அப்படியானால், வசூல் ரீதியாக பார்க்கும் போது விஜய் தான் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார் என்பதே நிதர்சன உண்மை; ஆனால் இது வரும் காலத்தில் மாற வாய்ப்பு இருக்கிறது;