மேலும் அறிய

Vidamuyarchi Update: ஆகஸ்ட்டில் தொடங்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு... அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... முழு விபரம்!

விடாமுயற்சி திரைப்படம் ஜூன் மாதமே தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தொடர்ந்து  படப்பிடிப்பு பணிகள் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் வந்தன.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் தேதி வெளியாகியுள்ளது. தடையற தாக்க தொடங்கி கலகத் தலைவன் வரை திரைப்படங்கள் இயக்கி, தன் தனித்துவ ஆக்‌ஷன் பாணி படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி.

இவர் முதன்முறையாக கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் உடன் இணையும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் இப்படத்தை இயக்கும் நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நீரவ்ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களின் வரிசையில் நடிகர் அஜித் உடன் 5ஆவது முறையாக த்ரிஷா இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

விடாமுயற்சி திரைப்படம் ஜூன் மாதமே தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தொடர்ந்து  படப்பிடிப்பு பணிகள் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் வந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த துணிவு பட வெற்றியடைந்த நிலையில், அவரது அடுத்த படமான ஏகே 62 படத்தின் அப்டேட்டுகளை எதிர்நோக்கி ரசிகர்கள் தொடர்ந்து காத்திருந்து வருகின்றனர்.

இப்படத்தில் முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் படத்தின் கதையில் திருதி இல்லாத காரணத்தால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இப்படத்தில் இருந்து விக்னேஷ சிவன் விலகிய தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த பரபரப்பு அடங்கியதும் மகிழ்திருமேனி இப்படத்தின் இணைந்த அறிவிப்பும், படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்ற அறிவிப்பும் வெளியானது. இதனிடையே நடிகர் அஜித் ‘ஏகே மோட்டோ ரைட்’ எனும் புதிய பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றைத்  தொடங்கியதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.

“இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமல்லாமல்,  சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்கள், சாகச ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு  நிறுவனம் சுற்றுப்பயணங்களை வழங்கும்” என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இதன் காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமாகுமோ என ரசிகர்கள் கவலைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget