Vidamuyarchi Update: அஜித்தின் ‘விடாமுயற்சி’ அப்டேட் எப்போது?.. வீடியோ மூலம் பதில் சொன்ன மகிழ் திருமேனி..!
நடிகர் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என தெவித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி
ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளதா என யோசிக்க வைக்கும் அளவுக்கு பதில் ஒன்றை தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி.
விடாமுயற்சி
துணிவு படம் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62 ஆவது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அஜித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்கிறது. அஜித் மற்றொரு பக்கம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே பல சிக்கல்களைக் கடந்து விக்னேஷ் சிவனை தாண்டி, மகிழ் திருமேனி கைகளுக்கு விடாமுயற்சி படம் வந்துள்ள நிலையில், டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.
மேலும் கடந்த சில நாட்களாக “விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது எனும் அளவுக்கு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பரபரப்பான தகவல்கள் கிளம்பிய சூழலில் , நார்வே, துபாய் எனப் பயணித்து தன் சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பியது அவரது ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புது லுக்கில் அஜித்
மேலும் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் க்ளீன் ஷேவ் செய்து முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். விடாமுயற்சி படத்திற்காக அஜித் இந்த தோற்றத்தில் மாறியிருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தற்போது படத்தின் இயக்குநர் மகிழ் திருமேணியின் ட்விட்டர் பதிவு.
விடாமுயற்சி அப்டேட்
#Vidaamuyarchi Update 💯🔥🔥 pic.twitter.com/TlXTQWpisK
— Magizh Thirumeni (@MagizhDiroffl) September 4, 2023
இயக்குநர் மகிழ் திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்றிருக்கும் வீர விநாயகா பாடலைப் பகிர்ந்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் விரைவில் என்று பதிவிட்டிருந்தார். வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரவிருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் நிச்சயம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
மேலும் படிக்க: Actor Vijay: மைனஸ் 10 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்.. விஜய்யின் டெடிகேஷனை பார்த்து மிரண்ட நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்..!