Ajith Kumar - Shalini: அஜித் - ஷாலினி காதலில் விழுந்து 25 ஆண்டுகள்.. வைரலாகும் கொண்டாட்ட வீடியோ!
அஜித் ஷாலினி இருவரும் தங்களுக்கு ஸ்பெஷலான நாளை கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Ajith Kumar - Shalini: அஜித் - ஷாலினி காதலில் விழுந்து 25 ஆண்டுகள்.. வைரலாகும் கொண்டாட்ட வீடியோ! ajith kumar shalini cutting cake together in their special day video goes viral Ajith Kumar - Shalini: அஜித் - ஷாலினி காதலில் விழுந்து 25 ஆண்டுகள்.. வைரலாகும் கொண்டாட்ட வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/05a643e10841013cef2d4a450172f3581710662418469574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி என்னதான் பிஸியான கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும், மற்றொருபுறம் தன் குடும்பத்துக்கு நேரம் செலவிடுவதில் பிற நடிகர்கள் மற்றும் தன் ரசிகர்களுக்கு பெரும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் அஜித்.
காதலில் விழுந்து 25 ஆண்டுகள்!
தன் மனைவி நடிகை ஷாலினி, மகன், மகளுக்கு நேரம் செலவிடுவது என ஆஃப் ஸ்க்ரீனிலும் ரசிகர்களைக் கவர்ந்து இதயங்களை அள்ளி வருகிறார் அஜித். கோலிவுட்டில் தனித்துவமான நடிகர், நடிகையாக தங்கள் பயணத்தைத் தொடங்கி காதல் திருமணம் செய்து கொண்டு இன்று நட்சத்திர தம்பதியாக அஜித் - ஷாலினி தம்பதி வலம் வருகின்றனர். அமர்க்களம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் முதலில் தன் காதலை சொல்ல, பின் ஷாலினி அவருக்கு பச்சைக் கொடி காண்பிக்க இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தாலும், தற்போது சமூக வலைதளங்களில் ஷாலினி ஆக்டிவ்வாக வலம் வருகிறார். கணவர் அஜித் மற்றும் பிள்ளைகள், தங்கை ஷாம்லி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என பர்சனல் பக்கங்களை ஷாலினி பகிர்ந்து வருகிறார்.
வைரல் வீடியோ
அந்த வகையில் அஜித் ஷாலினி இருவரும் தங்களுக்கு ஸ்பெஷலான நாளை கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களது திருமண நாள் அடுத்த மாதம் தான் கொண்டாடப்படும் நிலையில், தற்போது கேக் வெட்டி எந்த விசேஷத்தைக் கொண்டாடியுள்ளார்கள் என ரசிகர்கள் ஆவல் தெரிவித்து வருகின்றனர்.
Silver jubilee of love anniversary!!
— Prakash (@prakashpins) March 17, 2024
Latest pic of Ajith sir & Shalini Ajith mam love anniversary celebration all together ❤️🎉 #Ajithkumar #VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/qHwWTUWRfv
மேலும் அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் - ஷாலினி இருவரும் காதல்வயப்பட்ட நாள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி அஜித் - ஷாலினி இருவரும் இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படம் வெளியான நிலையில், 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
துபாயில் செட்டிலா?
அஜித் துபாயில் அடுத்தடுத்து 2 வீடுகளை வாங்கியுள்ள நிலையில், விரைவில் அவர் தன் குடும்பத்துடன் அங்கு செட்டிலாக உள்ளதாக முன்னதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகின.
அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக அவரது அடுத்த படமான AK 63 படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. குட் பேட் அக்லி என இப்படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தினை இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில் 2025ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)