VidaMuyarchi: ”என்றுமே எங்க தல தான்” .. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரசிகர்களிடம் அன்பு காட்டிய அஜித்..!
அஜித் அடுத்ததாக “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் நடிகர் அஜித்குமார் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவர் நடிப்பில் கடைசியாக நடப்பாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து அஜித் அடுத்ததாக “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த டைட்டிலில் முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அஜித்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரின் கதை பெரிய அளவில் ஈர்க்காததால் இயக்குநர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி விடா முயற்சி படத்தை இயக்குவார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்குப் பின் இந்த 3 பேரும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர். நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்கள். அனிருத் . இசையமைக்கிறார். வழக்கம்போல இந்த படத்தின் எந்த அப்டேட்டும் வெளியே வரக்கூடாது என்பதில் அஜித் மட்டுமல்லாது படக்குழுவினர் கவனமாக இருந்து வருகின்றனர்.
ஆனால் விமான நிலையம் அல்லது வெளியிடங்களில் அஜித் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க அக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு துபாய் மற்றும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. விடா முயற்சி அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடிகர் அஜித் , அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகிய மூவரும் டின்னர் சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது.
#AK meet the fans in #Vidamuyarchi shooting spot ✌️🔥 #Ajithkumar
— Saran (@rskcinemabuff) December 17, 2023
pic.twitter.com/jTCg206hTQ
இப்படியான நிலையில் அஜித்தின் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரை சந்திக்க ரசிகர்கள் வந்திருந்த நிலையில் அவரை நிற்க வைத்து பேசாமல் உட்காருமாறு தெரிவிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Actor Sampath Ram: ‘இப்படி நடந்ததே இல்லை’ - அஜித் படத்தால் நடிகர் சம்பத் ராம் வாழ்க்கையில் நடந்த சோகம்..!