Actor Sampath Ram: ‘இப்படி நடந்ததே இல்லை’ - அஜித் படத்தால் நடிகர் சம்பத் ராம் வாழ்க்கையில் நடந்த சோகம்..!
தமிழ் சினிமாவில் வில்லன்களை விட அவர்களுடன் இருக்கும் அடியாள் கேரக்டர்களில் நடிப்பவர்கள் சிலர் ரசிகர்களுக்கு தனித்து தெரிவார்கள். அதில் மிக முக்கியமானவர் நடிகர் சம்பத் ராம்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்து நடிகர் சம்பத் ராம் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன்களை விட அவர்களுடன் இருக்கும் அடியாள் கேரக்டர்களில் நடிப்பவர்கள் சிலர் ரசிகர்களுக்கு தனித்து தெரிவார்கள். அதில் மிக முக்கியமானவர் நடிகர் சம்பத் ராம். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லன் கூட்டத்தில் ரைட் அல்லது லெஃப்ட் ஹேண்ட் நபராக வலம் வரும் அவர் நேர்காணல் ஒன்றில் திரையுலக வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “நான் முதல்வன் படத்தில் தான் கூட்டத்தில் ஒருவனாக அறிமுகமானேன். தீனா படத்தில் தான் என் முகமே வெளியே தெரிந்தது. அந்த படத்தில் அடியாளாக நடித்ததில் கிட்டதட்ட கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வரை அதே மாதிரியான கேரக்டர்கள் தான் வந்தது. எல்லா மொழிகளிலும் என்னை பயன்படுத்தி கொண்டாலும் சரியான கேரக்டர்கள் அமையவில்லை என பல நாள் வருத்தப்பட்டுள்ளேன். 25 வருடங்கள் ஆகி விட்டது. சர்வதேசம் என்ற படத்தில் திருநங்கை கேரக்டரில் நடித்தேன். அந்த படம் விரைவில் வெளியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.
அப்போது அவரிடம் அஜித் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் நடந்த சம்பவம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் என்னை அறிந்தால் படம் பண்ணி முடித்தவுடன் எனக்கு டீசர், ட்ரெய்லரில் எல்லாம் நான் வருவேன் என்று தெரியாது. படம் ரிலீசுக்கு 3 நாள் முன்னாடி டிவியில் 10 விநாடி ஓடும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் அஜித் சாருக்கு இணையாக என்னுடைய காட்சி வரும்.
அதை பார்த்ததும் எனக்கு போன் மேல போன் வருது. ரொம்ப சந்தோசமா இருக்குது. என்னை அறிந்தால் நாளைக்கு ரிலீஸ் என்றால் இன்னைக்கு கௌதம் மேனனின் உதவி இயக்குநர் எனக்கு போன் பண்ணினார். ‘சார் தப்பா நினைக்காதீங்க. படத்தோட நீளம் கருதி உங்களுடைய சீனை தூக்கிட்டோம். ஒருவேளை நாளைக்கு நீங்க உங்க பேமிலி அல்லது ஃப்ரண்ட்ஸோட படம் பார்க்க போய் உங்க சீன் இல்லன்னா வருத்தப்பட்டுற கூடாதுன்னு தான் இதை சொல்றேன். அடுத்த படத்துல கண்டிப்பா பெருசா பண்ணலாம்ன்னு கௌதம் சார் சொன்னாரு’ என சம்பத் ராம் கூறியுள்ளார்.
நான் உடனே, ‘நீங்க சொன்னதே பெரிய சந்தோசம்’ என கூறினேன். நான் அஜித்துடன் 11 படங்கள் நடித்துள்ளேன். அதேமாதிரி 211 படங்கள் பண்ணியிருக்கிறேன். அதில் நான் நடித்து என்னோட சீன் வராத படம் என்றால் அது என்னை அறிந்தால் தான் என சம்பத் ராம் தெரிவித்துள்ளார்.