Ajith Kumar: உலகம் சுற்றும் சிட்டிசன்: இந்தியா முழுவதும் அஜித் சென்ற இடங்களை காட்டும் வரைபடம்
இந்தியாவில் அஜித் பயணம் சென்ற அனைத்து இடங்களையும் காட்டும் வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் தனது உலகச் சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடித்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் அஜித் சென்றுவந்த இடங்களை குறிக்கும் வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் சுற்றும் அஜித்:
அஜித்குமார் ரசிகர்களுக்கு கடந்த மாதமும் சரி இந்த மாதமும் சரி மிகவும் சந்தோஷமான காலம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தினமும் ஏதாவதொரு புதிய தகவல் அவரைப் பற்றி வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அஜித் தனது உலக சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடித்துள்ளார். இந்த ஒட்டுமொத்த பயணத்தின் போதும் ஏ. கே. வின் பல புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வந்திருக்கின்றன. தற்போது இந்தியாவில் அஜித் சென்று வந்த இடங்களை காட்டும் வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட இந்தியா மொத்தமும் பைகில் சென்று வந்துள்ளார். அந்த வரைபடத்தை பார்ப்பதற்கு முன் சென்ற மாதத்திலிருந்து ஒரு ஃபாலோ அப்.
முதலில் அஜித் பைக் ஓட்டும் பல புகைப்படங்கள் வெளியாகின. அடுத்ததாக நேபாளில் அஜித் ஒரு உணவு விடுதியில் சமைத்த வீடியோ ஒன்று வெளியாகி டெரண்டானது. இதனை அடுத்து ரசிகர் ஒருவர் அஜித்குமாருடன் வீடியோ வெளியிட்டிருந்ததுஅடுத்ததாக அஜித் குமாரின் பயணத்தை பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா தெரிவித்திருந்தார். அடுத்ததாக வெளியானத் தகவல் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் விடாமுயற்சி. இத்தனைக்குப் பிறகு தற்போது மற்றுமொரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
வரைபடம் ரிலீஸ்:
செம ஸ்டைலாக அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் தான் இந்த புதிய அப்டேட். கடைசியாக ஏ. கே நேபாள் மற்றும் பூட்டான் சென்று வந்துள்ளார். அஜித் இந்தியாவில் எந்த எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் சென்றுள்ளார் என்பதை குறிக்கும் ஒரு வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இந்தியாவில் அத்தனை இடங்களுக்கும் பயணம் சென்றுள்ளார் அஜித்.இந்தியா முழுவதிற்குமான சுற்றுப் பயணத்தை அஜித் முடித்துள்ளார் என்றும் உலகச் சுற்றுப் பயணத்தின் அடுத்தக் கட்டப் பயணத்தை விடாமுயற்சி படத்திற்குப் பின் நவம்பர் 2023 இல் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார் அஜித்தின் பி. ஆர். ஓ சுரேஷ் சந்திரா.
அஜித நடித்துவரும் விடாமுயற்சித் திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கி வருகிறார். மகிழ் திருமேணி இதற்குமுன் தடையரத் தாக்க, மீகாமன், தடம் கலகத் தலைவன் ஆகியத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். லைகா நிறுவணம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.அனிருத் இந்தப் படத்திற்கி இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.