ஜப்பானில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு...டிமாண்டி காலனி 3 அப்டேட்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் டிமாண்டி காலனி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
டிமாண்டி காலனி
2015-ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி. தமிழில் வெளியான வித்தியாசமான ஹாரர் படங்களில் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அறிவிப்பு வெளியாகி பின் நீண்ட நாட்கள் ரிலீஸ் காத்திருப்பில் இருந்தது. இதனிடையில் இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து இயக்குநர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கைகொடுத்த டிமாண்டி காலனி 2
இப்படியான நிலையில்தான் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளியானது. அருள்நிதி பிரியா பவாணி சங்கர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. வசூல் ரீதியாக படம் உலகளவில் ரூ 85 கோடி வசூலித்து இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
ஜப்பானில் படப்பிடிப்பு
முந்தைய இரு பாகங்களைக் காட்டிலும் டிமாண்டி காலனியின் மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் ரூ 35 கோடியில் உருவாக இருப்பதாகவும் ஜப்பானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்க்கிங் படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் மும்மையைச் சேர்ந்த கோல்டுமைன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அருள் நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கூடிய விரைவில் படப்பிவிப்பு தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
#MTexclusive - #DemonteColony3 Update 🌟
— Movie Tamil (@MovieTamil4) December 30, 2024
- Demonte Colony 3 is being produced by #PassionStudios and Mumbai-based #GoldMines.
- The film is planned to be shot in Japan.
- This film is going to start as soon as possible.
- Following the huge success of Demonte Colony 2, the… pic.twitter.com/jMhYZYkmNn
மேலும் படிக்க : " அந்த வழில போகக்கூடாதுனு சொன்னாங்க ஆனா..." கடவுள் நம்பிக்கை பற்றி ஸ்ருதி ஹாசன்
கணவனுக்காக கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய நயன்தாரா ? மாட்டித்தவிக்கும் 7 ஸ்கிரீன் நிறுவனம்