கணவனுக்காக கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய நயன்தாரா ? மாட்டித்தவிக்கும் 7 ஸ்கிரீன் நிறுவனம்
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக 7 ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் நயன்தாரா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விக்னேஷ் சிவன் நயன்தாரா
தமிழ் சினிமாவில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் தம்பதியாக மாறியுள்ளார்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். ஆரம்பத்தில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தனுஷூடனான சர்ச்சைக்குப் பின் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது புதிய குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
எல்.ஐ.கே படப்பிடிப்பில் பிரச்சனை
தற்போது விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் ,எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஓரு ஆண்டுகாலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையிலும் இன்னும் முழுமை பெறவில்லை. விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதல் செலவு ஆகியுள்ளதாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனம் கூடுதல் பட்ஜெட் ஒதுக்க மறுத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சொந்த பணத்தை முதலீடு செய்து படப்பிடிப்பை முடித்துக் கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய நயன்தாரா
7 ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாக இருந்த மற்றொரு படத்தில் நயன்தாராவும் கவினும் இணைந்து நடிக்க இருந்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் கால்ஷீட் கேட்டுள்ளது. அதற்கு நயன்தாரா சாமர்த்தியமான பதில் ஒன்றை கொடுத்துள்ளார். எல்.ஐ.கே படத்தின் படப்பிடிப்பிற்கு பணம் கேட்டபோது இல்லை என்று சொன்னீர்களே பின் எப்படி இந்த படத்தை தொடங்குவது, முதலில் எல்.ஐ.கே படப்பிடிப்பை முடித்துவிட்டு வாங்கள் அதன்பின் நான் கால்ஷீர் தருகிறேன் என நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எல்.ஐ.கே மற்றும் கவின் நடிக்க இருக்கும் படம் என இரு படங்களும் நிலுவையில் இருந்து வருகின்றன.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க : கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
143 கோடி கடன்...கங்குவா படத்தால் கார்த்தி படத்தை வெளியிடுவதில் பிரச்சனை