திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஐஸ்வர்யா தனுஷ்!
தந்தை ரஜினிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவருக்காக திருப்பதியில் சாமி தரிசனம் மேற்காள்ளவந்திருப்பார் எனக்கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினியின் மூத்த மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.
கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்குப்பிறகு திருப்பதி கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். கோவிலுக்கு வரக்கூடிய அனைத்து பக்தர்களும் முறையான கொரோனா பரிசோதனை மற்றும் விதிமுறைகளின் படி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்கள் பல பலரும் இவ்வாறு சாமி தரிசனம் மேற்கொள்ளும் வேளையில், சமீப காலங்களாக பல சினிமா, கட்சித்தலைவர்கள், சின்னத்திரைப்பிரபலங்கள் பலர் திருப்பதி கோவிலுக்கு வருகைப்புரிகின்றனர். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ளவதற்காக நேற்று சென்றிருக்கிறார்.அப்போது ரங்கநாயகி மண்டபத்திற்கு வந்த போது ஐஸ்வர்யா தனுசுக்கு அர்ச்சகர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் திருப்பதி கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஐஸ்வர்யா தனுசுக்கு தீர்த்தப்பிரசாதங்களை வழங்கினர். சாமி தரிசனம் மேற்கொண்ட இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. தந்தை ரஜினிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவருக்காக திருப்பதியில் சாமி தரிசனம் மேற்காள்ளவந்திருப்பார் எனக்கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு கடந்த மாதம் தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. அந்த நாள்களில் தான் தன் தந்தைக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றியும், நலமுடன் இருப்பதாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள அன்பாலும், பிரார்த்தனைகளாலும் அப்பா உடல் நலத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார் எனவும் அப்பாவிற்காகப் பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் என் உள்ளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிவிட்டரில் நன்றிகளை ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். இந்த செய்திகள்அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதி சென்ற புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாக்களில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படங்களையெல்லாம் ரசிகர்கள் பார்வேட் செய்துவரும் நிலையில் பலரும் அப்பா எப்போதும் நல்ல இருப்பார்.. எப்போதும் நாங்கள் இருக்கிறோம் என்பது போன்ற மெசேஜ்களைப்பகிர்ந்து வருகின்றனர். இவரைப்போன்று பல சினிமா பிரபலங்களும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.