எனது இதயத்துடிப்பு.. சூப்பர் ஸ்டாருக்கு மகள் சொன்ன சூப்பரான வாழ்த்து!!
இன்று (ஜூன் 19) சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தைக்கு க்யூட்டான வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 19) சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தைக்கு க்யூட்டான வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது இதயதுடிப்பு.. இனிய தந்தையர் தின வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். அந்தப் பதிவுடன் தனது தந்தை ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட அழகு ததும்பும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
காதல் மலர்ந்து முறிந்த கதை
காதல் கொண்டேன் படம் வெளியான சமயம் அது. அப்போதுதான் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமாகிறார் தனுஷ். அடுத்த நாளே ஐஸ்வர்யாவிடம் இருந்து பூங்கொத்து ஒன்று தனுஷின் கைகளுக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. 6 மாத காலம் காதலில் இவர்களின் செய்தி இரு குடும்ப வீட்டாருக்குத் தெரிய வர, ஐஸ்வர்யா தனுஷை விட 2 வயது மூத்தவராக இருந்த போதும், தம்பதியினர் உறுதியாக இருந்ததால், பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம் 2004 - ல் நடந்தது. 2006 ஆம் ஆண்டு யாத்ரா பிறக்க, 2010 ஆம் ஆண்டு இராண்டாவது குழந்தையாக லிங்கா பிறக்கிறார்.
டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா தனது தனுஷை ஹீரோவாக வைத்து 3 படத்தை எடுத்தார். என்னதான் அது படம் என்றாலும், கணவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் மற்றொரு பெண்ணை ஐஸ்வர்யாவால் எப்படி வைத்து பார்க்க முடிந்தது என்பது கேள்வி அப்போது எழாமல் இல்லை. ஆரம்ப கால பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யாவின் உறவை பற்றி தனுஷ் பகிர்ந்த போது, நாங்கள் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. 20 களின் நடுப்பகுதியில் எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதைத்தான் உங்கள் மனம் நம்புகிறது” என்று கூறியிருந்தார். ஆனால் 3 பட பிரோமோஷன் பேட்டிகளில், அவர்களுகிடையேயான உரையாடல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தது.
2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கிடையேயான கருத்து வேறுபாடு அதிகமானதாகவும், கதாநாயகிகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது ஐஷ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தனுஷ் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் பல முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இருவரும் பிரிவை அறிவித்தனர்.