‛வாங்க என் செல்லங்களா...’ அப்பா உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை வரவேற்ற ஐஸ்வர்யா!
Aishwarya Rajinikanth: அமெரிக்காவில் தாங்கள் சந்தித்த அனுபவங்களை தாய் ஐஸ்வர்யாவிடம் குழந்தைகள் பகிர்ந்து கொண்டார்களாம்.
![‛வாங்க என் செல்லங்களா...’ அப்பா உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை வரவேற்ற ஐஸ்வர்யா! Aishwarya Rajinikanth welcomed her sons back home from America with a hug ‛வாங்க என் செல்லங்களா...’ அப்பா உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை வரவேற்ற ஐஸ்வர்யா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/19/0caf4a77ee19236ad6ee664de0d2d3d61658205877_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, சமீபத்தில் பரஸ்பரம் பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அவர்களது மகன்கள், தாய், தந்தை இருவருடனும் இருந்து வருகின்றனர். தனுஷ் செல்லும் நிகழ்ச்சிகளில் தனுஷ் உடனும், ஐஸ்வர்யா செல்லும் நிகழ்ச்சிகளிலும் அவருடனும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள The Grey Man’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளில் அந்த படத்தின் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தில் நடித்த வகையில் நடிகர் தனுஷூம் அந்த நிகழ்வில் பங்கேற்றார். அமெரிக்காவில் நடந்த இந்நிகழ்ச்சியில் தன் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோருடன் பங்கேற்ற தனுஷ். கோட் , சூட் அணிந்து உற்சாகமாக பங்கேற்றார்.
View this post on Instagram
நடிகர் தனுஷை விட அவர் மகன்களின் க்யூட் போட்டோ, பலராலும் கொண்டாடப்பட்டது, பகிரப்பட்டது. இந்நிலையில் அந்த பணிகள் நிறைவடைந்து, தனுஷ் இந்தியா திரும்பியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது தாய் ஐஸ்வர்யாவை சந்திக்க மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் சென்றுள்ளனர்.
மகன்களை கண்ட தாய் ஐஸ்வர்யா, அவர்களை கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார். நீண்ட தூர பயணத்திற்குப் பின் வீடு திரும்பும் குழந்தைகளை, ஒரு தாய் அரவணைக்கும் வழக்கமான அன்பு தான் என்றாலும், பிரிந்த கணவருடன் வெளிநாடு சென்று, மீண்டும் தன்னிடம் வரும் குழந்தைகளை உச்சிமுகர்ந்து வரவேற்கும் தாய் ஒரு பிரபலம் என்பதாலும், கடந்த இரு நாட்களாக உலகமே கவனித்த குழந்தைகள் என்பதால், இந்த போட்டோ ரொம்ப ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
தாயின் அன்பை பெற்ற பின், அமெரிக்காவில் தாங்கள் சந்தித்த அனுபவங்களை தாய் ஐஸ்வர்யாவிடம் குழந்தைகள் பகிர்ந்து கொண்டார்களாம். அதுமட்டுமின்றி, ஹாலிவுட் வட்டாரங்களில் தாங்கம் சந்தித்த அனுபவம் மற்றும் தந்தை தனுஷிற்கு கிடைத்த மரியாதை ஆகியவற்றையும் ஐஸ்வர்யாவிடம் அவரது மகன்கள் பகிர்ந்து கொண்டார்களாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)