Aishwarya Rajesh: தனுஷூடன் நெருக்கமான காட்சிகள்..வெற்றிமாறன் கொடுத்த சேஃப் ஸோன்..அனுபவம் பகிரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
’வடசென்னை' படத்தில் தனுஷூடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தது குறித்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசி இருக்கிறார்.
![Aishwarya Rajesh: தனுஷூடன் நெருக்கமான காட்சிகள்..வெற்றிமாறன் கொடுத்த சேஃப் ஸோன்..அனுபவம் பகிரும் ஐஸ்வர்யா ராஜேஷ்! Aishwarya Rajesh shares her experience about shooting intimate scenes in Vada Chennai Aishwarya Rajesh: தனுஷூடன் நெருக்கமான காட்சிகள்..வெற்றிமாறன் கொடுத்த சேஃப் ஸோன்..அனுபவம் பகிரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/22ca4cc4497ce8418159d0da56247aae1667466496649570_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
’வடசென்னை' படத்தில் தனுஷூடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தது குறித்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசி இருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த தனுஷூக்கு ஜோடியாக வந்த பத்மா கதாபாத்திரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். வடசென்னையின் அக்மார்க் பெண்ணாக ஐஸ்வர்யா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்தப்படத்தில் பத்மா கதாபாத்திரம் அதிகமான கெட்ட வார்த்தைகள் பேசுவது போலவும், அன்பு கதாபாத்திரத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இவை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னைப்பார்க்கும் பலரும் வடசென்னை 2 பற்றியே கேட்கிறார்கள். அந்தப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு முன்னதாக இரண்டு கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். மூன்றாவதாகத்தான் நான் தேர்வு ஆனேன். இந்தப்படத்திற்காக என்னை தேர்வு செய்த வெற்றிமாறன், பத்மா கதாபாத்திரம் அதிகமான கெட்ட வார்த்தைகள் பேசும் என்று சொன்னார். படப்பிடிப்பின் போது நான் சங்கடப்படாத வகையிலும் பார்த்துக்கொண்டார்.
படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சி படமாக்கிக்கொண்டிருக்கும் போது, நான் ஏதாவது சங்கடப்படும் படி உணர்கிறேனா என்பதை வெற்றிமாறன் சோதனை செய்தே கொண்டே இருப்பார். அப்படி, ஏதாவது நான் சங்கடப்படும் படி உணர்ந்தால், அந்த காட்சியை நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்த அவர், அந்தக்காட்சிகளுக்கான மாற்றுக்காட்சியை தயார் செய்து வைத்து இருந்தார்.” என்று பேசி இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)