Theeyavar Kulaigal Nadunga: இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக அர்ஜூன்..மிரட்டும் 'தீயவர் குலைகள் நடுங்க' போஸ்டர்..!
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம், திரில்லர் திரைப்படமான “தீயவர் குலைகள் நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
![Theeyavar Kulaigal Nadunga: இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக அர்ஜூன்..மிரட்டும் 'தீயவர் குலைகள் நடுங்க' போஸ்டர்..! Aishwarya Rajesh Next movie Theeyavar Kulaigal Nadunga First Look Poster Released Theeyavar Kulaigal Nadunga: இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக அர்ஜூன்..மிரட்டும் 'தீயவர் குலைகள் நடுங்க' போஸ்டர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/04/43ba9b029c64ee1c5324fc766dfe841e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு ”தீயவர் குலைகள் நடுங்க” என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் லெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Happy to launch the first look of #TheeyavarKulaigalNadunga.Congrats team#தீயவர்குலைகள்நடுங்க #TKNFirstLook@gsartsoffl #GArulKumar @aishu_dil @akarjunofficial @off_dir_Dinesh @GkReddy1939 @praveenraja0505 @AbhiramiVenkat3 @editorkishore @aarun666 @dineshashok_13 @DoneChannel1 pic.twitter.com/uBFzKVWiK8
— VijaySethupathi (@VijaySethuOffl) March 4, 2022
என்ன கதை
இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையாம். கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார்.
View this post on Instagram
இப்படத்திற்கு பரத் ஆசீவகன் இசையமைத்திருக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யாவுடன் ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)