மேலும் அறிய

"சொல்ல நினைச்சு சொல்லாத விஷயம்..'' செல்வராகவன்.. Mrs.செல்வராகவன் ஜாலி டாக்.!

செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு மேடையில் செல்வராகவனை நேர்காணல் செய்த கீதாஞ்சலி ஸ்வாரஸ்யமான கேள்விகளை கேட்டார்.

தமிழ் சினிமா உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனராக திகழ்கிறார் இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்குனர் செல்வராகவன், கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே சரியாக போகவில்லை. செல்வராகவனும் அவருடைய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்துவேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு மேடையில் செல்வராகவனை நேர்காணல் செய்த கீதாஞ்சலி ஸ்வாரஸ்யமான கேள்விகளை கேட்டார்.

முதல் சந்திப்பு

கீதாஞ்சலி: நான் உங்க கிட்ட வேலைக்காக இன்டர்வியூக்கு வந்தேன் ஞாபகம் இருக்கா? 

செல்வராகவன்: இல்ல, சாரி…

கீதாஞ்சலி: என்னோட வாழ்க்கைய மாத்துன நாள், அது ஞாபகம் இல்லையா!

செல்வராகவன்: கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு.

கீதாஞ்சலி: அன்னைக்கு என்ன நடந்தது?

செல்வராகவன்: முதல்ல தயங்கி தயங்கி வந்தீங்க… அப்புறம் பேச ஆரம்பிச்சீங்க… இன்னைக்கு வரைக்கு பேசிட்டு இருக்கீங்க! 

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்

கீதாஞ்சலி: அப்போ நெனச்சீங்களா, இந்த பொண்ணுதான் வாழ்க்கை துணையா வர போகுதுன்னு?

செல்வராகவன்: பாத்த உடனே யாருங்க நினைப்பா?

கீதாஞ்சலி: லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் மாதிரி ஒரு ஃபீலிங்கும் வரலையா?

செல்வராகவன்: இல்ல வரல… இது வரைக்கும் வரல, இனிமே வந்தா சொல்றேன்.

தொடர்புடைய செய்திகள்: வேறு பெண்ணுடன் தகாத உறவுவைத்து கொண்ட தந்தை! கத்தியால் குத்திக்கொன்ற மகன்.. பரபரப்பு சம்பவம்

செல்வராகவன் மாறிட்டாரா?

கீதாஞ்சலி: செல்வா சார் ரொம்ப மாறிட்டாருன்னு சொல்றாங்க…

செல்வராகவன்: தோற்றம் மாறி இருக்கலாம். கொஞ்சம் தாடி வளத்துருக்கேன். வேற ஒன்னும் இல்ல.

கீதாஞ்சலி: இல்ல எல்லாரும் சொல்றாங்க நான் உங்களை மாத்திட்டேன்னு… அது உண்மையா?

செல்வராகவன்: ஆமாம், நெறய.

கீதாஞ்சலி: ஆச்சர்யமா இருக்கு, என்ன மாத்தினேன்?

செல்வராகவன்: நீ வந்ததுக்கு அப்புறம் நெறைய பொறுமை வந்துருக்கு.

கீதாஞ்சலி: நான் உங்களை ரொம்ப படுத்துறேனா?

செல்வராகவன்: இல்ல இல்ல 3 பசங்க… அதுக்கு மேல என்ன கிப்ட் கொடுக்க முடியும்.

சொல்லாத விஷயம்

கீதாஞ்சலி: என்னை பார்த்ததில இருந்து, என்கிட்ட சொல்லணும்ன்னு நெனச்சு, சொல்லாத விஷயம் என்ன?

செல்வராகவன்: எல்லாமே சொல்லிட்டேன், எதுவும் மறைக்கல…

கீதாஞ்சலி: இல்ல அடி வயிற்றில இருந்து, ஏதாவது சொல்லனும்ன்னு நெனச்சது.

செல்வராகவன்: 60, 70 வயசுல, ஹோட்டலுக்கு, மனைவி, குழந்தைகள் எல்லாரோடையும் நிம்மதியா போகனும்ன்னு ஒரு ஆசை.

என்று கூற சூழ்ந்திருந்தவர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர்.

தனுஷை வைத்து, செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் இயக்குவதை தொடர்ந்து, நடிப்பிலும் முழு கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், பீஸ்ட், சாணி காயிதம் திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget