Watch Video : சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.. காதலை கன்ஃபார்ம் செய்தாரா அதிதிராவ் ஹைதாரி?
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சித்தார்த்துக்கு அழகான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் மூலம் போஸ்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை அதிதி
ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். மலையாளத்தில் வெளியான 'பிரஜாபதி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். இருவருமே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகர்கள்.
உறுதியான ரிலேஷன்ஷிப் :
இருவருக்கும் இடையே காதல் என்றும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள் என்றும் கிசு கிசு காட்டுத்தீயாய் பரவி வந்தாலும் இருவரும் இது குறித்து வெளிப்படையாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இருவரும் பல இடங்களில், நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்படுகிறார்கள். அதனால் இவர்கள் காதலர்கள் என்றே உறுதி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.
ஜோடியாக பங்கேற்பு :
சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் ஒன்றாக இணைந்து 2021-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மகா சமுத்திரம்' திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட இவர்களது பழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தெலுங்கு நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்தம், பொன்னியின் செல்வன் 1 ஆடியோ லான்ச் என பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாகவே கலந்து கொண்டனர்.
முறிந்த முதல் திருமணம் :
சித்தார்த் 2003-ஆம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று பின்னர் அது முறிந்தது. அதேபோல அதிதி ராவ் சினிமாவில் நுழைவதற்கு முன்னரே திருமணம் நடைபெற்று பின்னர் சினிமாவில் நடிகையானதால் விவாகரத்து பெற்றார். இருவருக்குமே முதல் திருமணம் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலான டான்ஸ் போஸ்ட் :
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த காதல் ஜோடி அவ்வப்போது அவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் 'எனிமி' படத்தில் இடம்பெற்ற 'மாலா டம் டம்...' பாடலுக்கு இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தனர். இது ஏராளமான லைக்ஸ்களை குவித்தது.
View this post on Instagram
சித்தார்த் பிறந்தநாளுக்கு அதிதி போஸ்ட் :
அதே போல நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சித்தார்த்துக்கு தனது இன்ஸ்டா பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை அதிதி ராவ். மேலும் அவர்கள் இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்! காதல், இசை, எப்போதும் வலிமையான, தூய்மையான இதயம், மேஜிக், சிரிப்பு என வளர்ச்சி அமையட்டும்! என்றுமே இதேபோல மேஜிக்கலாய் இரு... ஹேப்பியஸ்ட் சித்து டே!" என அழகான ஒரு பதிவையும் சித்தார்த்துக்கு பதிவிட்டுள்ளார்.அதிதியின் இந்த போஸ்ட் சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.