Adipurush Trailer: கண்களுக்கு விருந்தளிக்குமா 3டியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ்? மே 9-ல் டிரெய்லர் ரிலீஸ்..!
மே 9-ஆம் தேதி டிரெய்லரை வெளியிடுவதற்கு முன், ஆதிபுருஷ் குழு பிரபாஸ் ரசிகர்களுக்காக மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தில் டிரெய்லரை பிரத்தியேகமாக திரையிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
ஓம் ரவுத் இயக்கிய ஆதிபுருஷ் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில மாதங்களாக தென்னிந்திய திரையுலகின் பேசுபொருளாக இருந்து வருகிறது, அதன் ட்ரைலர் வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஆதிபுருஷின் டிரெய்லர் தியேட்டரில் வருகின்ற மே 9, 2023 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மே 9-ஆம் தேதி வெளியாகும் ஆதிபுருஷ் டிரெய்லர்
பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான், ஓம் ரவுத் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து ஆதிபுருஷின் டிரெய்லரை மும்பையில் மே 9, 2023 அன்று பிரமாண்டமான நிகழ்வில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சுமார் 3 நிமிடம் நீளமான டிரெய்லர் பார்வையாளர்களை ராமாயண உலகிற்கு அழைத்துச் செல்லும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. மே 9 ஆம் தேதி டிரெய்லரை வெளியிடுவதற்கு முன், ஆதிபுருஷ் குழு பிரபாஸ் ரசிகர்களுக்காக மே 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் டிரெய்லரை பிரத்தியேகமாக திரையிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
“இது ஹைதராபாத்தில் உள்ள ரசிகர்களுக்கான 3டி திரையிடலாக இருக்கும். பிரபாஸ் மற்றும் ஆதிபுருஷ் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் இந்த படத்திற்கும் ரசிகர்களே ஆதரவு என்று நம்புகிறார்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஆதிபுருஷுக்கு ரசிகர்கள் அளித்த அனைத்து ஆதரவையும் பாராட்டுவது அவர்களின் கடமை என படக்குழு கருதுகிறது.
अमर है नाम, जय सिया राम।🙏
— Om Raut (@omraut) April 29, 2023
The eternal chant, Jai Siya Ram.🙏
అమరం, అఖిలం
ఈ నామం,
సీతారాముల ప్రియనామం🙏
அழியா நின் நாமம்
ஜெய் சீதாராம்🙏
ಅಮರ ನಿಮ್ಮ ನಾಮ
ಜೈ ಸೀತಾ ರಾಮ🙏
എന്നേക്കും ശാശ്വതമാണ്
ജയ് സീതാ റാം🙏
Jai Siya Ram
जय सिया राम
జై సీతారాం
ஜெய் சீதா ராம்
ಜೈ ಸೀತಾ ರಾಮ್ pic.twitter.com/sFkBzF2fuJ
ஆதிபுருஷ் ஜூன் 16 ரிலீஸ் உறுதி
ஆதிபுருஷ் படம் திட்டமிட்டபடி ஜூன் 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற படங்களின் அடிப்படையில் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது, மேலும் படத்தை ஜூன் 16 அன்று உலகம் முழுவதும் கொண்டு வருவதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். இது 37 நாட்கள் நீண்ட பிரமோஷன் படம் வெளியாகும் போது பிரமாண்ட ஓப்பனிங்கிற்கு வழிவகுக்கும் என படக்குழு கருதுகிறதாம். மேலும் படத்தின் ஆல்பத்தில் சில சிறந்த பக்தி பாடல்கள் உள்ளன, அவை டிரெய்லருக்குப் பிறகு வெளியாகும், ”என்று கூறப்படுகிறது.
ஓம் ரவுத் இயக்கிய, ஆதிபுருஷ் இந்திய சினிமாவின் மிகவும் அதிகப்படியான முதலீட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். மேலும் இப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.