Watch Video : சூர்யாபோல கார்த்தி இல்ல... கார்த்தியை பத்தி யுவராணி என்ன சொன்னாங்க தெரியுமா?
Watch Video : கார்த்தி மற்றும் சூர்யா உடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை யுவராணி என்ன சொன்னார் தெரியுமா?
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு படையெடுத்த நடிகைகள் ஏராளம். அதில் ஒருவர் தான் நடிகை யுவராணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தவர்.
நடிகர் விஜய் ஜோடியாக 'செந்தூரபாண்டி' படத்தின் மூலம் பிரபலமான யுவராணி அதை தொடர்ந்து பசும்பொன், பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்னேஷ் உடன் இணைந்து யுவராணி ஆட்டம் போட்ட 'தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும் சண்டையே வந்ததில்ல...' பாடல் தற்போது ட்ரெண்டிங்காக இருக்கிறது.
சினிமாவில் இருந்து மெல்ல சின்னத்திரைக்கு வந்த யுவராணி 30க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார். ராதிகாவின் 'சித்தி' சீரியலில் பிரபாவதி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இன்றும் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அவருடன் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நடிகர் கர்த்தி மற்றும் நடிகர் சூர்யா உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு யுவராணி பதில் அளிக்கையில் சூர்யா கூட 'சிங்கம்' படத்தில் ஒர்க் பண்ணி இருக்கேன். அவருடைய டெடிகேஷனைப் பார்த்தால் வியப்பா இருக்கும். அவரை பார்த்தா ரிஸர்வ்ட் ஆளு இல்லாட்டி ஸ்ட்ரிக்ட் ஆளுன்னு சொல்ல முடியாது. எதிர்க்க பார்த்தா நல்லா பேசுவாரு. என்ன எப்படி இருக்கீங்க அப்படினு கேப்பாரு. ஆனா கார்த்தி ரொம்ப நல்லா ப்ரெண்ட்லியா பேசுவாரு. நம்ம வீட்ல இருக்கவங்க கிட்ட எப்படி பேசுவோமோ அதே போல நல்லா ஜோவியலா பேசுவாரு. எப்படி அக்கா தம்பி தங்கச்சிகிட்ட பேசுவோமோ அந்த மாதிரி பேசுவார்.
View this post on Instagram
'கடைக்குட்டி சிங்கம்' படத்தில அவரோட அக்காவா நடிச்சு இருப்பேன். அந்த படத்துல கீழ உட்கார்ந்து கையை நீட்டி அப்பாகிட்ட பேசுற அந்த வசனம் கொஞ்சம் கஷ்டமா இருத்தது. இதுவரைக்கும் நான் அப்படி பட்ட காட்சியில் எல்லாம் நடிச்சதே இல்லை. அதனால கொஞ்சம் டஃப்பா தான் இருந்துது" என பேசி இருந்தார் நடிகை யுவராணி.