VijayaLakshmi: தற்கொலை செய்ய போகிறேன்.. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து குற்றம் சாட்டி வருகிறார்.
தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழில் ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் சீமான் மீது புகாரளிக்கப்பட்டது. ஆனால் முடிந்து போன வழக்கை மீண்டும் விசாரிக்கப்படுவதாக சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதேசமயம் விஜயலட்சுமி தொடர்ச்சியாக சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் வெளியிட்ட வீடியோவில், “பிப்ரவரி 29 ஆம் தேதி நான் ஒரு வீடியோ வெளியிட்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்தேன். சீமான் அவர்களை என்னிடம் பேச சொல்லியிருந்தேன். இன்னைக்கு மார்ச் 5 ஆம் தேதி ஆகிடுச்சு. ஒரு பொண்ணு மொட்ட மாடியில் போய் எவ்வளவு மன அழுத்தம் ஆகியிருந்தா அப்படி ஒரு வீடியோ போட்டுருப்பா. ஆனால் வீடியோ வெளியிட்டும் பரவாயில்ல.. சாகட்டும்ன்னு ஒருத்தர் விடுகிறார் என்றால் எப்படி?
நான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2008 ஆம் ஆண்டு என் அக்காவின் பிரச்சினைக்காக தான் நாங்க சீமானிடம் சென்றோம். அப்போது சீமானுக்கு திருமணம் ஆகவில்லை. என்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என சொல்லி விட்டு 3 ஆண்டுகளாக என் வாழ்க்கையை சீரழித்து இரகசியமாக திருமணம் செய்து அதை வெளியே சொல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ஏதோ பிரச்சினை என சொல்லி நடுரோட்டில் விட்டுச் சென்றார். என்னை வாழவிடுவாரா என பார்த்தால், என்னை தவறாக பேசி, யார் உதவி பண்ண வந்தாலும் திட்டி, என்னைப் பற்றி பேச வேண்டாம் நான் அவளை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி, மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாக டீலிங் பேசினார்.
சரின்னு நான் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டேன். ஆனால் இன்னைக்கு கயல்விழி தான் என் உயிர் என டிராமா போடுகிறார். இப்ப கர்நாடகாவுல என்னால வாழ முடியலன்னு நான் சொன்னாலும் சரி சாவு என சொல்லுகிறார். இதுதான் தமிழ்நாட்டில் என்னுடைய கடைசி வீடியோ. இன்னும் 2 நாட்களில் நான் எப்படி செத்துப்போனேன் என கர்நாடகா மாநிலம் உங்களுக்கு தெரிவிக்கும். என்னோட மரணத்தைப் பற்றி விளக்கம் கொடுக்க சீமானுக்கு அழைப்பு விடுக்கும். இந்த மாதிரி ஒருத்தர் தமிழ்நாட்டு வேணுமா வேண்டாமா என நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என தெரிவித்துள்ளார்.