Varalaxmi Sarathkumar: சத்தமில்லாமல் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும்!
Varalaxmi Sarathkumar Engagement: நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்ற நபருடன் நேற்று நிச்சயம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar), மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்ற நபருடன் நேற்று நிச்சயம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வரலஷ்மி சரத்குமார் அவர்களும், மும்பை தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 भां, மும்பையில், பெற்றோர்கள் முன்னிலையிலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.
View this post on Instagram
மேலும், இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து நடிகை ராதிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















