Actor Vijay: 'விஜய் கட்சி தொடங்கினா, தொண்டரா இருப்பேன்’ : வனிதா கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தொண்டராக பயணிப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தொண்டராக பயணிப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவரின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனிடையே அநீதி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய வனிதா, ‘தன்னுடைய கம்பேக்கில் நிறைய படம் நடித்துள்ள நிலையில், முதல் படமாக அநீதி வெளியாகிறது. இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலனுக்கு நன்றி என கூறினார். தொடர்ந்து, ‘அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாரூக்கான். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை’ என கூற இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது.
விஜய்யின் அரசியல் பயணம்
இப்படியான நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமாரிடம், ‘நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளீர்கள். அவரின் அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நடிகர் விஜய் மிகவும் திறமைசாலி. எதிர்கால சிந்தனைக் கொண்ட மனிதர். அவர் இப்ப உச்சத்தில் இருக்கிறார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் நான் கண்டிப்பாக சப்போர்ட்டாகவும், அவரை பின் தொடர்பவராகவும், ஒரு தொண்டராகவும் கூட ஒருப்பேன். அந்த அளவுக்கு விஜய்யை பிடிக்கும்” என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
நான் அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக் கொண்டுள்ளேன்.அதை ரொம்ப காலத்துக்கு அப்புறம் தான் உணர்ந்தேன். அவர் பேராசை எல்லாம் படமாட்டார். நான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால், நான் சரியான கட்சியை தேர்வு செய்வேன் இல்லையா? .. அந்நேரம் விஜய் கட்சி தொடங்கி இருந்தால் ஏன் சேர மாட்டேன் சொல்லுங்கள்” என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.