Vanitha Vijayakumar: எனக்கு இந்த மாதிரியான தந்தை இருந்தால்...- அந்தகன் பாடல் வெளியீட்டில் கண் கலங்கிய வனிதா
பிரசாந்திற்கு அமைந்தது போல் எனக்கு ஒரு தந்தை அமையவில்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்
அந்தகன்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் படம் அந்தகன். நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வனிதா விஜயகுமார், சிம்ரன், நவரச நாயகன் கார்த்திக், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு என பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்தை விநியோகிக்கிறார்.
அந்தகன் பாடலை வெளியிட்ட விஜய்
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று அந்தகன் படத்தின் முதல் பாடலான அந்தகன் அந்தம் வெளியிடப் பட்டது. விஜய் சேதுபதி மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை வெளியிட்டுள்ள நிலையில் விஜய் இந்தப் பாடலை வெளியிட்டார். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் மேடையில் மிக உணர்வுப் பூர்வமாக பேசினார்.
பிரசாந்த் மாதிரி எனக்கு ஒரு தந்தை அமையவில்லை
நிகழ்ச்சியில் பேசிய வனிதா “இன்றைய நாள் எனக்கு ரொம்பவு ஸ்பெஷலான நாள். அந்தகன் வெறும் நான் நடித்த படம் மட்டுமில்லை. அதற்கும் மேல். இன்னும் சொல்லப்போனால் அது எனக்கு ஒரு எமோஷன். அந்தகன் படத்தில் எனக்கு நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நான் எமோஷன் என்று சொல்லவில்லை. இது என்னுடைய குடும்பம் . தியாகராஜன் தான் என்னுடைய காட்ஃபாதர் மாதிரி. அவர் மீது எனக்கு அவ்வளவு அன்பு இருக்கிறது. ஒருமுறை தியாகராஜன் எனக்கு ஃபோன் செய்திருந்தார். அப்போது நான் என்னுடைய செல்ஃபோனை தொலைத்துவிட்டேன் என்று சொன்னேன். உடனே நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டு எனக்கு புது ஐஃபோன் 13 வாங்கிக் கொடுத்தார். இதுபோல யார் செய்வார்கள். யார் செய்யத் தோன்றும். என்னைப் போல் 80 களில் பிறந்தவர்களுக்கு பிரசாந்த் ஒரு பெரிய கிரஷ். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரசாந்திற்கு இடையில் ஒரு நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. பிரசாந்த் அவருடைய அப்பாவிடமிருந்து கடின உழைப்பு , நேர்மை உள்ளிட்ட விஷயங்களை கற்றுள்ளார். எனக்கு பிரசாந்திற்கு கிடைத்த மாதிரி ஒரு அப்பா இருந்தால் போதும்.” என வனிதா பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் உணர்ச்சிவசப் பட்டார். தொடர்ந்து பேசிய அவர் “ அதுதான் பிரசாந்த் , அதுதான் தியாகராஜன் , இந்தப் படம் பெரியளவில் வெற்றிபெற வேண்டும்” என்று வனிதா பேசினார்