Urfi javed: உச்சக்கட்ட கவர்ச்சியால் கடுப்பு.... ‛துணி அனுப்பவா?’ என கேட்ட நெட்டிசன்..பதிலடி கொடுத்த உர்ஃபி ஜாவேத்!
ஆடை அனுப்பி விடுகிறேன் என்று கூறிய ட்விட்டர் வாசி ஒருவருக்கு பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஆடை அனுப்பி விடுகிறேன் என்று கூறிய ட்விட்டர் வாசி ஒருவருக்கு பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் எப்படியும் வைரலாகிவிட வேண்டுமென்று சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் நடிகை உர்ஃபி ஜாவேத். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி இவர். சர்ச்சையைக் கிளப்ப வேண்டுமென்றே ஆடையை அணிந்து வரும் உர்ஃபி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
வழக்கம் போல அரைகுறை ஆடையோடு ஒரு போட்டோவை உர்ஃபி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ஒரு பதிவர், “ உங்களுக்கு ஆடை வேண்டுமா? நாங்கள் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறோம். அதிலிருந்து எங்களால் உங்களுக்கு உதவ முடியும். ஆடை வாங்க முடியாதவர்களுக்கு நாங்கள் உதவி வருகிறோம். ஊடகங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்த உர்ஃபி ஜாவேத், “ நிச்சயமாக.. எனக்கு துணியை அனுப்புங்கள். தற்போது நாங்களும் இங்கு ஒருவொருக்கொருவர் உதவி கொள்கிறோம். உங்களது மூக்கை உடைக்கும் பதிலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் இங்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016 ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விரிவாக்கிய அவர் 24 மணி நேர ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது. இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். இதன் மூலம் ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் இவரும் இணைந்து கொண்டார்.
View this post on Instagram
தன்னை ட்ரோல் செய்பவர்கள் குறித்து உர்ஃபி ஒருமுறை, "நான் இதை நினைத்தெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. அந்த முட்டாள் மக்கள் என்னை எப்போது தொந்தரவு செய்ததும் கிடையாது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது எனக்கு இடைஞ்சலா இருந்தது இல்லை. மீடியா தான் என்னை அவமானப்படுத்துகிறது "என்று தவற்றை ஊடகத்தின் பக்கம் திசை திருப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.