மேலும் அறிய

Swathi Konde: “தினமும் அழுவேன்” - ரசிகர்களின் கமெண்டால் நொந்துபோன “ஈரமான ரோஜாவே 2” நடிகை..!

பெர்சனல் வாழ்க்கையை வைத்து சண்டை போடாதீங்க என ரசிகர்களுக்கு பிரபல சீரியல் நடிகை சுவாதி கொண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பெர்சனல் வாழ்க்கையை வைத்து சண்டை போடாதீங்க என ரசிகர்களுக்கு பிரபல சீரியல் நடிகை சுவாதி கொண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்த சுவாதி கொண்டே, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். அந்த சீரியலில் பிரியா என்ற கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் ஈரமான ரோஜாவே 2 சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் நான் ப்ரைம் டைமுக்கு மாற்றப்படுகிறது. அதன்படி  ஈரமான ரோஜாவே 2 அக்டோபர் 2ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. 

இப்படியான நிலையில், ரசிகர்கள் தன்னை உருவகேலி செய்ததை நினைத்து பல நாட்கள் தான் அழுதுள்ளதாக நடிகை சுவாதி கொண்டே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நான் கன்னடத்துல 4 படங்கள் மற்றும் ஒரு சீரியல் பண்ணேன். நான் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடத்தில் கிடைத்தாலும், எதிர்பார்த்த வெற்றி என்பது கிடைக்கவில்லை. அப்படியான நிலையில் தான் நான் ஈரமான ரோஜாவே சீரியலில் கமிட் ஆனேன். ஆரம்பத்துல 15 நாள் ஷூட் வருவேன், ஹோட்டல்ல சாப்பிடுவேன் என எல்லாம் பிடிச்சிது. ஆனால் போகப்போக உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டது. டிராவல் ஒருபக்கம் என்றால், உணவு மறுப்பக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது. நான் ரொம்ப ஒல்லியாகி, வீக் ஆகிட்டேன். 

ஹோட்டலில் தங்கியிருந்தபோது நிறைய நாள் அழுதிருக்கேன். மனதளவில் பாதிக்கப்பட்டேன். இப்ப நான் வீடு வாங்கி இங்கே செட்டில் ஆகிட்டேன். நான் ஷூட்டிங் சென்றால் மகிழ்ச்சியாக இருப்பேன். தற்போது நான் ஓகே ஆகிட்டேன். என்னோட கேரியரில் ஒரு விஷயம் ரொம்ப கஷ்டப்படுத்திச்சு.  அதாவது இந்த ரசிகர்கள் சண்டை போடுவாங்க. நீங்க சீரியல் கேரக்டருக்காக சண்டை போட்டா பரவால்ல. பெர்சனல் வாழ்க்கையை வச்சு சண்டை போடாதீங்க. 

நிறைய உருவகேலி பண்ணுவாங்க. அதனால தான் நான் இன்னைக்கும் எந்த நேர்காணல் போனாலும் மேக்கப் போட மாட்டேன். என்னைப் பார்த்து ஆம்பளை மாதிரி இருக்கேன், மூஞ்ச கண்ணாடியில பார்த்துருக்கியா என கமெண்ட் பண்ணுவாங்க. அதையெல்லாம் நினைத்து தினமும் அழுவேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா போயிடுங்க. எங்க அப்பா, அம்மா, என்னை யாருக்கு பிடிக்குதோ அவங்க மட்டும் இருக்கட்டும். நிறைய பேர் என்னிடம் இதெல்லாம் கண்டுக்காதீங்க என சொல்வாங்க. ஆனால் இப்படி உட்கார்ந்து கமெண்ட் போடுறாங்கன்னா எந்த அளவுக்கு அவங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கும். 

நான் யாரிடமாவது பேசும்போது டிராமா பண்ணுவதாக சொல்வாங்க. நான் நேரிலும் சரி, கேமரா முன்னாலும் சரி ஒரே மாதிரியாக தான் இருக்கிறேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி சாப்பிடுறேன். தயவுசெய்து உருவக்கேலி பண்ணாதீங்க” என அந்த நேர்காணலில் நடிகை சுவாதி கொண்டா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Rohini Theatre: ”இனிமேல் ஆக்‌ஷன் தான்.. கொஞ்சம் கூட எங்களை யோசிக்கவில்லை” .. ரசிகர்களுக்கு ரோகிணி தியேட்டர் எச்சரிக்கை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget