அலைபாயுதே படத்தின் போதே அஜித் மீது ஷாலினிக்கு கொள்ளை காதல்.. மனம் திறக்கும் நடிகை ஸ்வர்ணமால்யா!
ஒரு காலக்கட்டத்தில், ஏன் நான் இப்படி சினிமா வாய்ப்பிற்கு மறுக்கிறோம் என்ற குற்ற உணர்வு என்னுள் வந்தமையால், படிக்க வேண்டும், தேர்விற்கு செல்ல வேண்டும் என்ற கன்டிசனோடு மணிரத்னம் சாருக்கு ஓகே சொன்னேன்.
அலைபாயுதே பட சூட்டிங் பாதியில் இருந்தே தல அஜித்தின் மீது அளவுக்கு மீறிய காதலுடன் இருந்தார் நடிகை ஷாலினி என பழைய நினைவுகளை பகிர்கிறார் நடிகையும், நடன கலைஞருமான நடிகை ஸ்வர்ணமால்யா.
தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகையும், நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா.. பன்முகத்திறமையை தனக்குள் கொண்டே ஸவர்ணமால்யாவிற்கு சிறுவயதில் இருந்தே நடனத்திலும் படிப்பிலும் ஆர்வம் அதிகம். இவருடைய திறமையைப்பார்த்த பல இயக்குநர்கள் நடிப்பதற்கு அழைத்தப்போதிலும் படிக்க வேண்டும் என்று வேண்டாம் என்று உதறி தள்ளியவர் நடிகை ஸ்வர்ணமால்யா. ஆனாலும் ஒரு காலக்கட்டத்தில், தனது சினிமாப்பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படி தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஸ்வர்ணமால்யா, எப்படி திரையுலகிற்கு வந்தார்? என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
அந்தப்பேட்டியில், "எங்களது குடும்பம் கலைக்குடும்பம் என்பதால் நாட்டியத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை அளப்பெரியதாகவே இருந்தது. இந்நிலையில் என்னுடைய மேடை நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்த ஷாருகாசன் அங்கிள் தான் என்னை நடிக்கனும் தான் என்று சொன்னார். ஆனால் என்னுடைய மனம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இருந்தப்போதும் விடுமுறை நாள்களில் டிவி நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வழங்கினேன் என்கிறார். மேலும் பல இன்ட்ர்வியுக்கள் எடுத்து என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்” என்கிறார்.
இதோடு மேடை கலைஞராக இருந்தமையால் பயம் என்பது என்னிடம் இல்லை எனவும், பெரிய பெரிய நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொண்டு தொகுத்து வழங்கிய போது புதிய அனுபவமாக இருந்தது என்றும், இதன் மூலம் எப்படி மேனேஜ் செய்வது என்பதைக் கற்றுக்கொண்டேன் என பெருமையுடன் கூறுகிறார் நடிகை. இப்படி என்னுடைய பயணம் ஒருபுறம் சென்றுக்கொண்டிருந்த நிலையில் தான், சன்டிவியில் மேற்கொண்ட ப்ரோகிராமைப்பார்த்த மணிரத்னம் சார் என்னை சினிமாவிற்கு வர வேண்டும் என்று அழைத்தார். ஆனால் படிக்கணும் என்று கூறியதால் அந்த நேரத்திலும் நான் வேண்டாம் என்று மறுத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு காலக்கட்டத்தில், ஏன் நான் இப்படி சினிமா வாய்ப்பிற்கு மறுக்கிறோம் என்ற குற்ற உணர்வு என்னுள் வந்தமையால், படிக்க வேண்டும், தேர்விற்கு செல்ல வேண்டும் என்ற கன்டிசனோடு மணிரத்னம் சாருக்கு ஓகே சொன்னேன்.. இப்படித்தான் என்னுடைய திரைப்பயணம் தொடங்கியது என்கிறார். இப்பட சூட்டிங்கின் பாதியில் தான், நடிகை ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்தது எனவும் அது அளவுக்கு மீறியதாக இருந்ததாகவும் கூறியுள்ளார். சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதற்கு வெளிநாடு சென்றேன். டிஎஸ்டிஆர் பல்கலைக்கழகத்தில் படித்த நாள்களில் பல கலையை எனக்கு கற்றுக்கொடுத்தது எனவும் கூறினார் ஸ்வர்ணமால்யா. இதோடு சினிமாவிற்காக என்னோட வாழ்க்கை முறியவில்லை. இதற்கு காரணம் வேறு எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.