ரஜினியின் முத்து படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்...
பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்பது தன் சுகன்யாவின் உண்மையான பெயராகும்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் முதலில் மீனா வேடத்தில் நான் தான் நடிக்கவிருந்தேன் என நேர்காணல் ஒன்றில் சுகன்யா தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் படத்தில் அறிமுகம்
பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்பது தன் சுகன்யாவின் உண்மையான பெயராகும். அந்த படம் கொடுத்த வெற்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சுகன்யாவை உயர்த்தியது.
தொடர்ந்து சின்ன கவுண்டர்,திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சோலையம்மா, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, இந்தியன், சேனாதிபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் குட்லக், சில்லுன்னு ஒரு காதல், தொட்டால் பூ மலரும், அழகர் மலை உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக வலம் வந்தார். பின்னர் சீரியல் பக்கம் சென்ற அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அதன்பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கும் சுகன்யாவை மீண்டும் திரையில் நடிக்க வலியுறுத்தி அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சுகன்யா ரஜினியுடன் மட்டும் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுகன்யா விளக்கமளித்துள்ளார்.
மிஸ் ஆகிப்போன வாய்ப்பு
அதில், “ரஜினியுடன் நடிக்க ஏன் வாய்ப்பு அமையவில்லை என எனக்கு தெரியவில்லை. நான் ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை கோயம்புத்தூர் ஏர்போட்டில் சந்தித்தேன். அதற்கு முன்னால் அவரின் 3 படங்களில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் மிஸ்ஸாகி விட்டது. அதேசமயம் சேனாதிபதி ஷூட்டிங் முடித்து கொண்டு கோயம்புத்தூர் சென்ற போது அவரை சந்தித்தேன். அப்போது கே.எஸ்.ரவிகுமார் என்னிடம், ஏன் நீங்க என்னோட படம் பண்ணவே மாட்டீங்களா என கேட்டார்.
அந்த சமயம் அவரின் முத்து படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி இருந்தது. நான் உடனே முத்து படம் சூப்பராக இருந்தது என கூறி வாழ்த்தினேன். உடனே அவர், வாழ்த்துறதுலாம் இருக்கட்டும். நீங்க ஏன் அதில் பண்ணவே இல்ல என கேட்டார். நான் உடனே, நானா வந்து எப்படி உங்க படத்துல பண்ண முடியும் என கேட்டேன். அதற்கு கே.எஸ்.ரவிகுமார், நான் உங்களை படத்துல நடிக்க கேட்டு இருந்தேனே என சொன்னார். எனக்கு பயங்கர ஷாக்காக இருந்தது. நான் எனக்கு சத்தியமா தெரியாது என அவரிடம் சொன்னேன். எனக்கு பதிலாக மீனா அந்த படத்தில் நடித்தார். உண்மையில் அவர் தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக நடித்தார் என நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத படம்
View this post on Instagram
1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ஜெயபாரதி, ராதாரவி, ரகுவரன், வடிவேலு, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் முத்து. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது. அந்த அளவுக்கு படத்தைப் போல பாடல்களும் வரவேற்பை பெற்றது. இன்றும் டிவியில் இப்படம் பிரைம் டைமில் தான் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.