மேலும் அறிய

Thunivu: துணிவு படம் எப்படி?.. ப்ரிவ்யூ ஷோ பார்த்த ஷாலினி சொன்ன பதில்... குஷியான ரசிகர்கள்..

துணிவு படத்திற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி வரைக்கும் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன.

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி  ப்ரிவ்யூ ஷோ பார்த்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே படத்தில் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் வெளியீடாக நாளை மறுநாள் (ஜனவரி 11) வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி வரைக்கும் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

துணிவு படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்டைலிஷான அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பிரமாண்ட கட் அவுட்கள், நலத்திட்ட உதவிகள் என துணிவு ரிலீசாகும் நாளை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajith kumar🔘 (@ajithkumarfansunity)

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி துணிவு படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்துள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தகவலறிந்து ஷாலினியை பார்க்க கூடிய ரசிகர்களிடம், படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன ஷாலினியே சொல்லிட்டாங்க.. அப்ப தியேட்டரில் நம்ம கொடி தான் பறக்கும் என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  இதனை கொண்டாடி வருகின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Embed widget