Saritha: ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை பறிகொடுத்த நடிகை சரிதா! எந்த படத்திற்கு தெரியுமா?
சரிதா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, இவருக்கு கிடைக்க இருந்த தேசிய விருதானது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது என்பது உங்களுக்கு தெரியுமா?
நடிகை சரிதாவிற்கு கிடைக்க இருந்த தேசிய விருது ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தால் கை நழுவி போனது எந்தப் படத்திற்கு என்று பார்க்கலாம் வாங்க. இயக்குனர் கே பாலசந்தர் ஒரு உண்மை கதையை படமாக்க எண்ணினார். அதற்காக அவர் தேர்வு செய்தது தான், எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதிய நாடகம்.
அந்த நாடகத்தை பார்த்து வியந்த கே பாலசந்தர் இயக்கிய படம் தான் தண்ணீர் தண்ணீர். கோவில்பட்டி அருகிலுள்ள, அத்திபட்டி கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை இந்தப் படம் விளக்கி கூறியது. தண்ணீருக்காக அத்திப்பட்டி மக்கள் நடத்திய போராட்டத்தையும் இந்தப் படம் எடுத்துக்காட்டியது.
1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் சரிதா, ராதா ரவி, ஆர் கே ராமன், ஏ கே வீராசாமி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 2 தேசிய விருதுகளை பெற்றது. அதோடு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் 2 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது.
இந்த நிலையில் தான் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கான பிரிவில் சரிதாவும், உமரோ ஜான் பாலிவுட் படத்திற்காக ரேகா ஆகியோரும் இறுதி போட்டி வரை வந்தனர். ஆனால், இறுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சரிதாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால், தேசிய விருதுக்கான தேர்வு குழுவில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்த நிலையில் மொழி பிரச்சனையால் அவர்கள் சரிதாவிற்கு வாக்கு அளிக்காதது தான் இவர் தேசிய விருதை பறிகொடுக்க காரணம் என கூறப்பட்டது.