Watch Video: சும்மாவே சூப்பரா ஆடுவாங்க! தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ரவுடி பேபியாக மாறிய சாய் பல்லவி!
Sai Pallavi: நடிகை சாய் பல்லவி தன் தங்கை நிச்சய விழாவில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. விபூதி வைத்த நெற்றி, அழகான பல் வரிசை, திக்கப் பேசும் தமிழ் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் பல ஆண்டுகள் நிரந்தர க்ரஷ் ஆக இருக்க அனைத்து சாத்தியங்களும் அவருக்கு உண்டு.
நடிகையாக மட்டுமில்லை, தனது நடனத்தின் மூலமாகவும் எல்லாருக்கும் அவர் ஷாக் கொடுத்திருக்கிறார். “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்தவர் சாய் பல்லவி. ரவுடி பேபி பாடலில் தனுஷூடன் அவர் ஆடிய ஆட்டம் இன்னும் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
தங்கையின் நிச்சயத்தில்..
தற்போது சாய் பல்லவி தனது தங்கை பூஜா கண்ணனின் திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளார். சாய் பல்லவியின் இளைய சகோதரியான பூஜா கண்ணன், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்.
View this post on Instagram
இதனிடையில் பூஜா கண்ணனும் வினீத் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பொதுவாக பகிர்ந்தார். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி தனது நண்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
எஸ்.கே 21
தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.