திருமணத்திற்கு இப்போ என்ன அவசரம்.. நச்சரித்த ரசிகர்கள்.. மனம் திறந்து பேசிய நடிகை
சினிமாவை விட்டு விலகி முழு நேரமாக புகைப்பட கலைஞராக மாறியுள்ள நடிகை சதா திருமணம் குறித்த கேள்விக்கு நச் என பதில் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சதா. இவர் தமிழில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து அந்நியன், எதிரி, உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் எலி படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். மார்க்கெட் இல்லாததால் தாந் காமெடி ஹீரோ படத்தில் நடிகையாக நடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
புகைப்பட கலைஞர் சதா
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பாலையா, சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அதேபோன்று தமிழிலும் விக்ரம், மாதவன், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். இருப்பினும் உன்னாலே உன்னாலே படம் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது என அவரே பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சதா தற்போது சினிமாவை விட்டு விலகி முழுமையாக புகைப்பட கலைஞராகியுள்ளார்.
முரட்டு சிங்கிள் சதா
சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது சிங்கிளாகவே வலம் வருகின்றனர். அதேபோன்று நடிகைகளில் த்ரிஷா, அனுஷ்கா, தபு, கெளசல்யா போன்ற நடிகைகள் இன்றும் 40 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கின்றனர். அவர்களது வரிசையில் தற்போது நடிகை சதாவும் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு தற்போது வயது 41. சினிமாவில் பல உயரங்களை அடைந்தாலும் குடும்ப வாழ்வில் பொறுமை காத்து வருவதாகக் கூறப்படுகிறது. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சதாவிடம் அவரது ரசிகர்கள் திருமணம் குறித்த செய்திகளை கேட்டு நச்சரித்துள்ளனர்.
திருமணம் எப்போது?
தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக இருக்கும் சதா, தற்போது முழு நேர புகைப்பட கலைஞராக மாறியிருக்கிறார். அவருக்கு பிடித்த வகையில் பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுப்பதை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அவர், திருமணத்தின் மீது ஆசையும் இல்லை, அதன் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். நான் புகைப்பட துறையில் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். அதன் பிறகு திருமணம் குறித்து யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார். சதா பேசியதை பலரும் டாக் செய்து திருமணம் குறித்து யாரும் கேள்வி கேட்காதீங்க என வைரலாக்கி வருகின்றனர்.





















