போலீசில் சிக்க வைக்க முயற்சி: அசோக் செல்வனை கலாய்த்த பிரியா பவானிசங்கர்!
போலீசில் சிக்க வைக்கு நடக்கும் முயற்சியை மேற்கோள்காட்டி நடிகர் அசோக் செல்வனை நடிகை பிரியா பவானி சங்கர் கலாய்த்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அசோக் செல்வன் தற்போது பிரியா பவானி சங்கருடன் இணைந்து 'ஹாஸ்டல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். ட்ரைடென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கான வேலைகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்கான வேலைகள் ஒரளவு முடிந்துள்ளது. அத்துடன் கடந்த மாதம் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் வெளியிட்டப்பட்டது. இது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் பிரபலங்கள் அனைவரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவுகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நேற்று ஒரு பதிவை செய்திருந்தார்.
அதில், "ஒரு மீம்ஸை பதிவு செய்துள்ளார். அந்த மீம்ஸில் யாருடா நீ? நானே போலீஸுக்கு தெரியாமா சந்துல டீ வித்துட்டு இருக்கேன் என் கிட்ட வந்து பஜ்ஜி இருக்கா போண்டா இருக்கானு கேட்டுட்டு இருக்க என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதை மேற்கொள் காட்டி அசோக் செல்வன் இது நீ தான" எனக் கூறி பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் அசோக் செல்வனை கலாய்த்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் அசோக் செல்வன் தமிழில் சிறிய இடவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய தெலுங்கு படம் ஒன்று வெளியானது. அதன்பின்னர் ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பிரியா பவானி சங்கர் தற்போது ஹாஸ்டல் படம் தவிர இந்தியன் 2, ருத்ரன், ஒ மண பெண்ணே, குறுதி ஆட்டம்,பாட்டு தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் 33ஆவது திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், அதற்கு அசோக்செல்வன் எந்த மாதிரி ரிப்ளே செய்யப் போகிறார் என்றும் ஒரு தரப்பு காத்திருக்கிறது. இன்னும் ஓரு தரப்பு, ‛நீங்களே கலாய்ச்சிக்கிட்டா நாங்க எப்படி கலாய்ப்பது,’ என தன் ஏக்கத்தையும் கொட்டி வருகிறது. கண்டிப்பாக படத்தில் உள்ள ஏதோ ஒரு காட்சியை நினைவூட்டும் விதமாகத்தான் ப்ரியா இந்த படத்தை டேக் செய்திருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.
மேலும் படிக்க: ‛சார்... ரம்பா ஸ்வீட் சாப்பிடுது சார்...’ இன்னைக்கு அவங்க பெர்த் டேப்பா!