Actress Oviya: வீடியோ வெளியிட்ட நடிகை ஓவியா... திடீரென உள்ளே வந்து முத்தம் கொடுத்த நபர்.. ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஓவியா.
நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஓவியா ஆர்மி
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து கலகலப்பு, முத்துக்கு முத்தாக, மதயானைக்கூட்டம்,யாமிருக்க பயமே, புலிவால், சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன், காஞ்சனா-3 என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து ராஜபீமா, சம்பவம், பூமர் அங்கிஸ் உள்ளிட்ட படங்களிலும் ஓவியா நடித்து வருகிறார்.
ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் ஓவியா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேவரைட் ஆனார். பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்ற அவர், அந்நிகழ்ச்சியில் சகபோட்டியாளர்கள் அனைவரிடமும் பகையை சம்பாதித்து ஓரங்கட்டப்பட்டார். இதற்கிடையில் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு சக போட்டியாளரான ஆரவ் உதவிக்கரம் நீட்ட, ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் மலர்ந்தது. ஒருசமயத்தில் கடும் மன அழுத்தத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
View this post on Instagram
அதேசமயம் தனக்கு ஓவியா மீது காதல் எல்லாம் இல்லை என ஆரவ் சொல்ல உடைந்து போனார். பிக்பாஸ் சீசன் 1ல் ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் அவருக்கு வாக்குகளை அள்ளி வீசினர். இதைக்கண்டு அரசியல் கட்சியினரே மிரண்டு போயினர். அதன்பின்னர் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைக்காட்டி வரும் ஓவியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.
இவர் சில தினங்களுக்கு முன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை வீடியோ ஒன்றை பதிவிட்டார். திடீரென பின்னால் இருந்து ஒருவர் சட்டென ஓவியாவுக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், யார் அந்த மாமாகுட்டி, ஓவியா நல்ல செய்தி சொல்லப்போகிறாரா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.