மற்றவர்களுடன் சமாதானம்...தனுஷூடன் நீதிமன்றத்தில் மோதி பார்க்க நயன்தாரா முடிவு..கேஸ் நிலவரம் என்ன?
நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக சந்திரமுகி தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் தயாரிப்பாளருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது

நயன்தாரா பற்றிய ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயண்படுத்தியதால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏபி இண்டர்நேஷ்னல் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தது.
சந்திரமுகி தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை
நடிகை நயன்தாராவை பற்றி ஆவணப்படம் கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் அனுமதியின்றி நானும் ரவுடிதான் படத்தின் 3 நொடி காட்சிகளை வைத்ததற்காக நடிகர் தனுஷ் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் மீது வழக்குபதிவு செய்திருந்தார். தனுஷைத் தொடர்ந்து சந்திரமுகி படத்தின் காட்சிகளும் பயன்படுத்தப் பட்டிருந்ததால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏபி இண்டர்நேஷ்னல் நயன்தாராவிடம் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கும் நிலையில் சந்திரமுகி படத்தின் தயாரிப்பாளருடன் நயன் தரப்பு வழக்கறிஞ்சர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
அடுத்தகட்ட விசாரணைக்கு முன்பாகவே தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கைக்கு வர முயற்சிப்பதாக நயன்தாரா தரப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் தனுஷ் தொடுத்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க நயன்தாரா முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
தனுஷூடன் மோத தயார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தை தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பின் போது நடந்த கசப்பான அனுபவங்களால் நானும் ரவுடிதான் படத்தின் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி மறுத்துவிட்டார். இருந்தும் நானும் ரவுடிதான் படத்தின் 3 நொடி காட்சியை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயண்படுத்தப்பட்டது. இந்த காட்சி தனது சொந்த செல்ஃபோனில் எடுக்கப்பட்டதாக நயன்தாரா தனுஷை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் நயன்தாரா , அவரது கணவர் விக்னேஷ் சிவன் , மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்தகட்ட விசாரணை தேதியை கூடிய விரைவில் நீதிமன்றம் அறிவிக்கும் என்றும் தனுஷூடன் சட்ட ரீதியாக நயன்தாரா மோத முடிவு செய்துள்ளதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
இட்லி கடை ஆடியோ லாஞ்ச்
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசுவது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.





















