143 கோடி கடன்...கங்குவா படத்தால் கார்த்தி படத்தை வெளியிடுவதில் பிரச்சனை
சூர்யாவின் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியதால் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்தார். திரையரங்கில் வெளியான முதல் நாள் தொடங்கியே கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின. இதனால் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் தோல்வியை சந்தித்தது. படல் உலகளவில் 1000 கோடி 2000 கோடி வசூலிக்கும் என பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் இப்படம் 11 கோடி ஷேர் மட்டுமே ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்குவா படத்தின் தோல்வியால் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
143 கோடி கடன்
வலைப்பேச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி கங்குவா படத்தால் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ரூ 143 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் வா வாத்தியார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே 140 நாட்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் மேலும் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கங்குவா படத்தால் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் ஞானவேல்ராஜா மேலும் 15 நாள் படப்பிடிப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வா வாத்தியார் படம் வெளியாகும் நேரத்தில் கங்குவா படத்திற்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என சிக்கல் ஏற்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
வா வாத்தியார்
அடுத்தபடியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்' படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. சூது கவ்வும் , காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிக பரப்பை உருவாக்கி நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரித்தி ஷெட்டி , ராஜ்கிரண் , சத்யராஜ் மற்றும் ஜி.எம் சுந்த உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் படிக்க : ஒருபக்கம் சமுத்திரராஜனின் அடாவடிச்செயல்….இன்னொரு பாகம் அசுரர்களின் எதிர்ப்புப் போராட்டம்… இந்த வாரம் லட்சுமி நாராயணா நமோ நமஹ
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்