Nadhiya: எவர்கிரீன் அம்மா... சின்னக்குயில் நதியாவின் லவ் ஸ்டோரி தெரியுமா? அவரே பகிர்ந்த ஸ்வீட் மெமரீஸ்
Nadhiya: நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் கொஞ்சம் யோசித்தார்கள். என்னுடைய பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது
சினிமாவை பொறுத்தவரையில் சில நடிகைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இளமை குறையாமல் அதே பிரெஷ் லுக்குடன் எவர்கிரீன் நடிகையாகவே இருப்பார்கள். அந்த வரிசையில் முதன்மையானவர் சின்னக்குயில் நதியா.
சினிமாவில் அறிமுகம் :
1984ம் ஆண்டு மலையாள திரையுலகின் மூலம் அறிமுகமானவர் நதியா. 'நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு' என்ற படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து ஒரு சில மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். மலையாள இயக்குநர் பாசில் தான் நதியாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த படம் தான் 1985ம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' திரைப்படம். முதல் படத்திலேயே ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்துவிட்டார்.
முன்னணி நடிகை :
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இருந்தாலும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்ற ஏக்கம் அவருக்கு உள்ளது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நதியா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார்.
அழகான அம்மாவாக ரீ என்ட்ரி :
ஒரு பிரேக்குக்கு பிறகு 2004-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கியூட் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ஸ்ட்ராங் ரீ என்ட்ரி கம்பேக் கொடுத்தார். மீண்டும் அழகான இந்த அம்மா பல ஹீரோக்களுக்கும் ஹீரோயினுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நதியா. சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் வெளியான 'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தில் கூட நடித்திருந்தார்.
நதியாவின் லவ் ஸ்டோரி :
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இந்த எவர்கிரீன் நடிகை தனது லவ் ஸ்டோரி பற்றி ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார். அவர் பேசுகையில் "நான் சினிமாவில் நுழைவதற்கு முன்னரே அவரை எனக்கு நன்றாக தெரியும். பக்கத்துக்கு வீட்டில் இருந்த பையன் என்பதால் நாங்கள் முதலில் நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்கள் ஆனோம். எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததால் நான் நடிப்பில் கவனம் செலுத்தினேன். அவர் வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார்.
இருவரும் கடிதம் மூலம் தான் தொடர்புகொள்வோம். அப்படி தான் ஒரு நாள் அந்த லெட்டர் என்னுடைய அம்மா கையில் சிக்கி விட்டது. அதற்கு பிறகு தான் வீட்டில் நாங்கள் காதலிக்கும் விஷயம் தெரியவந்தது. அவருக்கு அப்போது வேலை இல்லை என்பதால் வேலை ஒன்று கிடைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என அப்பா சொல்லிட்டார். நங்கள் இருவரும் பொறுமையாக காத்திருந்தோம். அவருக்கு வேலை கிடைத்ததும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் கொஞ்சம் யோசித்தார்கள். ஆனால் என்னுடைய பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் எங்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்" என்றார் நதியா.