Actress Meena: ‛‛ஒன்றரை நாளில் எல்லாமே நடந்தது... அதற்கு காரணம் அவர்தான்’ : மீனாவின் எமோஷ்னல் பேட்டி
Actress Meena: ‛‛அவசர அவசரமாக எடுக்குறாங்களே... என வருந்தினேன். ஆனால் வேறு வழியில்லை, நான் தான் அதற்கு காரணம்...’’ -மீனா
![Actress Meena: ‛‛ஒன்றரை நாளில் எல்லாமே நடந்தது... அதற்கு காரணம் அவர்தான்’ : மீனாவின் எமோஷ்னல் பேட்டி Actress Meena Interview during Drishyam 2 Release Opens up about Song Shoot Completed in 2 days Actress Meena: ‛‛ஒன்றரை நாளில் எல்லாமே நடந்தது... அதற்கு காரணம் அவர்தான்’ : மீனாவின் எமோஷ்னல் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/7caf076c6481dd562724fdfe89b01a05_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
த்ரிஷ்யம் படம் இரு பாகங்களாக வந்து, இரண்டும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வெளியான போது, மீனா அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இணையதளம் ஒன்றுக்கு மீனா அளித்த அந்த பேட்டியில், தான் பிஸியாக இருந்த காலகட்டத்தில், தான் விரும்பி பாடலை எடுக்க எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை விரிவாக பேசியுள்ளார். இதோ அந்த பேட்டி...
‛‛த்ரிஷ்யம் 2 வெளியான அன்று, இரவு 12 மணிக்கு காத்திருந்து படத்தை பார்த்தோம். நாளை பள்ளிக்கூடம் இருக்கிறது. முடித்துவிட்டு வந்து கூட படம் பார்க்கலாம் என்று நான் கூறினேன். ‛அம்மா... உன்னோட படத்தை எப்படிம்மா மிஸ் பண்றதுனு...’ என்று என் மகள் கேட்டாள், இரவு நேர காட்சி பார்த்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கி மறுநாள் பள்ளிக்கு ‛கட்’ அடிக்கும் நிலை ஏற்பட்டது. படம் பார்க்கும் போது, அடுத்து என்னனு சொல்லிடாதீங்கனு சொல்லிட்டே பார்த்தாங்க.
சின்ன குழந்தைகளுக்கு கார்ட்டூன் படங்கள் தான் பிடிக்கும், நைனிகாவிற்கும் அப்படி தான். அவள் என் படம் கூட விரும்பி பார்க்கமாட்டாள். ஆனால், த்ரிஷ்யம் 2 படத்தை அவ்வளவு ஆர்வமாக என் குடும்பத்தார் பார்த்தார்கள். ‛இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்...’ பாடல் எடுக்கும் போது, எனக்கு சுத்தமாக டேட் இல்லை. நான் 2 நாள் கொடுத்தேன். டிராவலில் பெரும்பாலான நேரம் போய்விட்டது. ஒன்றரை நாளில் அந்த பாடலை எடுத்தோம்.
பிரபுதேவாவின் கேரியரில் அந்த பாடல் கின்னஸ் சாதனை பாடல்; ஒன்றரை நாளில் எடுத்த ஒரு பாடல் அது தான். அவ்வளவு குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட பாடல் அது. பிரபுதேவாவுக்கு குறைந்தது 3 நாட்கள், ஒரு பாடலுக்கு வேண்டும். நடுவில் நிறைய நடன பயிற்சி இருக்கும். ஆனால், அந்த பாடல் எடுக்கும் போது எந்த பயிற்சியும் இல்லை. டான்ஸர்ஸை அப்படியே பார்க்குறது, அப்படியே டேக் போறது என்று தான், அந்த பாடல் ஷூட் செய்யப்பட்டது. ஏனென்றால், எனக்கு சுத்தமா தேதி இல்லை. அந்த இரண்டு நாளில் எடுத்தே ஆக வேண்டும். லொகேஷன் பிரச்சனையில், ஷ்பார்ட் தேர்வு செய்யவே நேரம் ஆகிவிட்டது.
ப்லிம் சிட்டிக்கு 12 மணிக்கு போய், 1:30 மணிக்கு தான் சூட்டிங் ஆரம்பித்தோம். எனக்கு அந்த பாடல் ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அதை எப்படி 2 நாளில் ஷூட் பண்ணப்போறோம் என்கிற கவலை எனக்கு இருந்தது. வேகவேகமாய் படப்பிடிப்பு நடந்த போது, அவசரம் அவசரமா எடுக்குறாங்களே என வருந்தினேன். ஆனால் வேறு வழியில்லை, என் டேட் தான் பிரச்சனை. ஆனால், ஒன்றரை நாளில் எடுத்த அந்த பாடல், ரொம்ப அழகா வந்திருந்தது. உண்மையில் அந்த பாடல் இன்னும் நன்றாக வந்திருக்கலாம். நான் பயந்த அளவிற்கு மோசமாக வரவில்லை; அதை விட நன்றாகவே வந்தது. அதற்கு காரணம் பிரபு தேவா தான்’’
என்று அந்த பேட்டியில் நடிகை மீனா தெரிவித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)