மேலும் அறிய
Advertisement
Lakshmi Menon: நான் தான் காதலை சொன்னேன்.. இப்போ அவருக்கு திருமணம் ஆகிடுச்சு.. நடிகை லட்சுமி மேனன் உருக்கம்!
Lakshmi Menon: “என்னிடம் யாரும் காதலை கூறவில்லை. ஆனால், நான் எனது காதலை வெளிப்படுத்தியுள்ளேன்” - லட்சுமி மேனன்.
Lakshmi Menon: தனது முதல் காதல் குறித்து நடிகை லட்சுமி மேனன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. அதனால் சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் பட வாய்ப்புகள் தமிழில் சரியாகக் கிடைக்காததால், படிப்பில் கவனம் தெலுத்தி வந்தார். இதற்கிடையே சந்திரமுகி-2 படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்தார். ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி-2 படத்தில் முக்கிய கேரக்டரில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக இருந்து போல், இந்த பாகத்தில், சந்திரமுகி வரும் கேரக்டராக லட்சுமி மேனன் நடித்திருந்தார். சந்திரமுகி-2 படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், அடுத்தடுத்து லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அண்மையில் நேர்க்காணல் ஒன்றில் லட்சுமி மேனன் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அதில், “என்னிடம் யாரும் காதலை கூறவில்லை. ஆனால், நான் எனது காதலை வெளிப்படுத்தியுள்ளேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேராக சென்று என்னுடைய லவ்வை சொன்னேன். அவர் சில நாட்கள் கழித்து என்னுடைய காதலை ஒப்புக் கொண்டார்.
அதுக்கு அப்பறம் நாங்கள் அடிக்கடி பேசத் தொடங்கினோம். தொலைபேசியில் தொடர்ந்து பேசினோம். போர்வைக்குள் இருந்துகொண்டு என் வீட்டாருக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவரிடம் பேசியுள்ளேன். வெளியே அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்கள் காதல் என்ன ஆனது என்பது தெரியாமல் போய் விட்டது. நாங்கள் இருவரும் படிப்பை பற்றி தான் யோசித்தோம். அதன் பிறகு இருவருமே பேசவில்லை. அண்மையில் அந்த நபருக்கு திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்” எனப் பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் படங்களில் விஷாலுடன் இணைந்து லட்சுமி மேனன் நடித்திருந்தார். இதனால், விஷாலை லட்சுமி மேனன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. தொடர்ந்து இது குறித்து பேசிய நடிகர் விஷால், லட்சுமி மேனன் உடனான திருமணம் குறித்த வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்க வேணாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: Guntur Kaaram: குண்டூர் காரம் படத்தில் என்னை புதுசா பாப்பீங்க.. நடிகர் மகேஷ் பாபு பேச்சால் எதிர்பார்ப்பு
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion