”சினிமாவுல என் அம்மாவையும் சீரியலில் என்னையும் கூப்டாங்க” - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை கல்யாணி ஓபன் அப்!
”அந்த படத்துல உங்க பொண்ணுதான் ஹீரோயினா பண்ணனும். ஆனா நீங்கள் அட்ஜெஸ்மெண்ட் பண்ணனும்னு சொன்னாங்க”
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் கல்யாணி என்னும் பூர்ணிதா. பல படங்களில் நடித்திருந்தாலும் , சிறிது காலத்திலேயே சின்னத்திரைக்கு வந்துவிட்டார். தற்போது கல்யாணிக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், நேர்காணல் ஒன்றில் தனது சிறு வயதில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில்” நான் 14, 15 வயசுல நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அப்போ எனக்கு ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அதை பிடிச்சுக்கிட்டேன். அது என்ன படம் , யார் தயாரிப்பாளர் எதுவுமே தெரியாது. அந்த படம் முடிச்சவுடனே நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஒரு பெரிய பேனர்ல ஒரு படம் வந்துச்சு. அந்த படத்துல உங்க பொண்ணுதான் ஹீரோயினா பண்ணனும் ஆனா நீங்கள் அட்ஜெஸ்மெண்ட் பண்ணனும்னு சொன்னாங்க. அம்மாவுக்கும் தமிழ் சரியா தெரியாது, இங்கிலிஷ் , மலையாளம்தான். அப்போ அம்மா டேட்ஸ்தானே பிரச்சனை இல்லைனு சொன்னாங்க. அதன் பிறகுதான் அவங்களுக்கு தெரிய வந்தது வேற மாதிரியான அணுகுமுறைனு. அதன் பிறகு நான் தொலைக்காட்சி பக்கம் வந்துட்டேன்.
View this post on Instagram
எனக்கு நடிப்புதான் ஆசை. அது எங்க போனாலும் பரவாயில்லைனு வந்துட்டேன். தொலைக்காட்சிகள்லையும் இப்படித்தான் ஒருவர் உனக்கு ஷோ வேண்டுமா , தனியாக மீட் பண்ணி பேசலாம்னு சொன்னாரு. அவரோட அணுகுமுறை தப்பா இருந்துச்சு. நான் எதிர்த்து பேசியதால அந்த ஷோ எனக்கு கிடைக்கல. பெண்கள் எப்போதுமே “NO " சொல்ல பழக வேண்டும். பெண்கள் சினிமாத்துறையில் நிறைய கால் பதிக்க வேண்டும். முக்கியமான பொறுப்புகள்ல அவங்க இருக்க வேண்டும். நான் 7 வயது இருக்கும் பொழுது பாலியல் கொடுமையை அனுபவத்திருக்கிறேன். அந்த மனிதர் இப்போ மிகப்பெரிய இசைக்கலைஞர். நானும் அம்மாவும் பிரபல நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்றோம். அவரும் வந்திருந்தார். அப்போது 6 மாதங்களாக நான் அவரால பாதிக்கப்பட்டேன். இப்போதும் அவரை நான் எதாவது ஒரு இடத்தில் பார்த்தால் நான் பழைய கல்யாணியாக மாறிவிடுவேன். ஆனாலும் நான் வெளிப்படையாக பேசும் பொழுது எனக்கு பவர் கிடைக்கும். அந்த மனிதர் என் அம்மாவின் நம்பிக்கைக்கு உரிய மனிதர். அம்மா இருக்கும் பொழுது வேறு மாதிரியாகவும், அம்மா இல்லாத பொழுது வேறு மாதிரியாகவும் நடந்துக்கொள்வார். அந்த வயது வெகுளியான வயது. எனக்கு அம்மாவிடம் சொல்ல தெரியவில்லை. என் வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் சீண்டல் , மன அழுத்தம் , அம்மாவின் மரணம் , தற்கொலை முயற்சி என பல படிகளை கடந்துவிட்டேன்“ என வெளிப்படையாக பேசியிருக்கிறார் கல்யாணி.