மேலும் அறிய

Kajal Aggarwal: எனக்கு எண்டே கிடையாது.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. அடுத்த பட அப்டேட் தந்த காஜல்!

காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தனது அடுத்தப் படம் பற்றிய சுவாரஸ்ய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுவதாக அனைவரும் பரபரப்பாக பேசிவந்த நிலையில் தனது அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

காஜல் அகர்வால்

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தில் வழியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் காஜல் அகர்வால். ராஜமெளலி இயக்கிய மகதீரா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் காஜல் . தமிழில் விஜய் , அஜித் , சூர்யா என அனைத்து ஸ்டார்களுடனும் திரையில் தோன்றிய காஜல் அகர்வால், ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்திருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகுவதாக வதந்தி

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலக இருப்பதாக அண்மையில் இணையதளத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். தற்போது இந்தக் குழப்பத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது அடுத்தப் படம் குறித்தான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்தப் படம் காஜல் அகர்வாலுக்கு 60ஆவது திரைப்படமாக இருக்கும். படத்தின் இயக்குநர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் தற்போதைய நிலைக்கு வெளியிடப்படவில்லை.  ஆனால் இந்தப் படம்  நிச்சயம் பெண் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழ்ங்கும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல்.

கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் காஜல்.  திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சில படங்களில் நடித்தார் . காஜல் கவுதம் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நீல் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். தனது குழந்தைக்கு ஒரு நல்ல தாயாக இருக்க குழந்தையுடன் அதிக நேரம் செலவிட காஜல் தீர்மானித்ததாகவும் அதனால், சினிமாவை விட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதனை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது காஜலின் தற்போதைய ட்விட்டர் பதிவு.

காஜல் நடித்து வரும் படங்கள்

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தியப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் காஜல். மேலும் தெலுங்கில் பகவத் கேசரி இயக்கும் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும்  காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget