மேலும் அறிய
Advertisement
ஆப்கானிஸ்தான்ல ஷூட்டிங் இருந்தது.. அவ்ளோ அமைதி : தலிபான்கள் குறித்து பேசிய எம்.பி..!
ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து பழம்பெரும் நடிகை ஹேமமாலினி குரல் கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தலிபான்கள் ஆக்கிரமிப்பு செய்தது. இதனையடுத்து அந்த நாட்டிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், வெளிநாடுகளுக்குத் தப்பியோட ஆரம்பித்து விட்டனர். மற்றோறு பக்கம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நுழைந்துவிட்டதால், உலக நாடுகளின் பார்வையை அனைத்து அந்நாட்டில் விழுந்துள்ளன.
தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் குவிந்ததை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். இதனால் தாலிபான் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பயண ஆவணங்கள் வைத்து இல்லாதவர்கள் விமான நிலையத்தை வீட்டு வெளியேற வேண்டும் என்றும், பயண ஆவணங்கள் வைத்து இருப்பவர்கள் பாதுகாப்பாக செல்ல உதவ தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த கொடூரச் செயல்களுக்குப் பல நாடுகளிலிருந்து கண்டனம் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பழம்பெரும் நடிகை ஹேம மாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், "என்ன நடக்கிறது மிகவும் மகிழ்ச்சியான, அமைதியாக இருந்த ஆப்கானிஸ்தானுக்கு என்ன ஆனது. இந்த செய்து கேட்டு எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.
What is happening to a happy, once peaceful nation, Afghanistan, is truly sad. My great memories of Afghanistan date back to ‘Dharmatma’- I play a gypsy girl & my portion was shot entirely there. Had a great time as my parents were with me and Feroz Khan took good care of us pic.twitter.com/2jrsZJpvQd
— Hema Malini (@dreamgirlhema) August 17, 2021
ஆப்கானிஸ்தானில் எனக்குச் சிறந்த நினைவுகள் இருக்கின்றன. நான் நடித்த தர்மத்மா படத்தின் படப்பிடிப்பு ஆப்கானிஸ்தானில் நடித்தது. நான் ஒரு ஜிப்சி பெண்ணாக அதில் நடித்தேன். என் பகுதி முழுவதும் அங்கே படமாக்கப்பட்டது. என் பெற்றோர் என்னுடன் இருந்தனர்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
90-ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகை ஹேமமாலினி. இவர் திரைத்துறையில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தார். தான் நடித்த முதல் இந்தி பட நடிகரான தர்மேந்திரா எம்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றி உள்ளார்.
ஹேமமாலினி தவிர சமந்தா இதுகுறித்து, நாம் அனைவரும் அமைதியாக இருந்து இதனை வேடிக்கை பார்க்க போகிறோமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளங்களில், ”இந்த சம்பவம் என் மனதை மிகவும் உலுக்குகிறது. ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நாம் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion