Geetha on K. Balachander : நக்கிட்டு கிஸ் பண்ணிடு... நடிகைக்கு பாலச்சந்தர் கொடுத்த ஷாக்... அனுபவம் பகிர்ந்த நடிகை கீதா
பாலசந்தர் சார் டோனே அதிகாரமாத்தான் இருக்கும் ஆனால் ரொம்ப நல்லா வேலை வாங்குவார் - நடிகை கீதா
தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். பல மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதி இயக்கியவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமான படம் 'நீர்க்குமிழி'. தன் பாணியில் கதைகளை இயக்குவதையே தனி சிறப்பாக கொண்டவர் கே. பாலச்சந்தர். 100-க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ள இவர் முன்னணி நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் ஜொலித்த பல கலைஞர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். தென்னிந்திய சினிமாவில் பாலச்சந்தரின் பங்கு மகத்தானது.
கே.பாலச்சந்தர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா. அவர் இயக்கிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் கீதாவும் நிச்சயமாக ஒருவராக இருப்பார். நேர்காணல் ஒன்றில் கீதா கலந்து கொண்டபோது அவர் பாலச்சந்தர் குறித்தும் அவர் எப்படி மற்றவர்களிடம் இருந்து வேலை வாங்குவார் என்பது குறித்தும் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சிறந்த இயக்குநர் என்ற விருதை பெற்று தனது 'புது புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடகராக நடிகர் ரகுமானும் அவரின் மனைவியாக கீதாவும் நடித்திருந்தனர். கணவர் மீது அளவு கடந்த பாசம், அன்பு என்பதை காட்டிலும் கணவர் மீது மிகவும் பொஸசிவ் கதாபாத்திரமாக சந்தேகப்படும் எதார்த்தமான மனைவியாக, பார்வையாளர்களுக்கு வெறுப்பு வரும் அளவுக்கு மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார் கீதா.
இப்படத்தில் கீதா நடித்த ஒரு காட்சி பாலச்சந்தரின் ஃபேவரட் காட்சிகளில் ஒன்று உள்ளது. கீதா மற்றும் ரகுமான் இடையே ஒரு காரசாரமான விவாதம் ஒன்று டைனிங் டேபிளில் நடக்கும். அந்த சமயத்தில் கீதா கிடுகிடுவென அவர் பேச வேண்டிய வசனங்களை எல்லாம் பேசிவிட்டு என்ன செய்வது என தெரியாமல் திடீரென டேபிளில் இருந்த சாஸை எடுத்து அப்படியே ரகுமான் மீது எறிந்து விடுவார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாலச்சந்தர் அடடே சூப்பரா இருக்கு, அப்படியே பண்ணு எக்ஸ்பிரஷன் கொடு, அவன் கிட்ட போய் சாஸை நக்கிட்டு கிஸ் பண்ணிடு என்றாராம். அப்போது தான் கணவரின் கோபத்தை அடக்கும் மனைவியாகவும் தெரியும், என அவர் அப்படி சொல்லி கொண்டே இருக்க இங்கே நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். பாலச்சந்தரும் ஸ்பான்டேனியஸாக நடிக்க வேண்டும் என்றார்.
அதே போல கல்கி படத்திலும் கீதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் ஏதாவது சரியாக செய்யவில்லை என்றால் "என்ன நீ பண்ற?" என சத்தமாக கேட்பாராம். அதை கேட்ட உடனேயே அழுகை வந்துவிடும். என்ன பண்ற என கேட்டாலே அழுகை வருதா உனக்கு என்பாராம். அவருடைய டோனே அதிகாரமாத்தான் இருக்கும் ஆனால் ரொம்ப நல்லா வேலை வாங்குவார் என பாலச்சந்தர் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் கீதா.