''23 வயசுல விவாகரத்து... அவ்வளவு அழுத்தம்''- மனம் திறந்த காயத்ரி ரகுராம்!
"இந்த சூழல்லதான் நான் கூட வேலை செய்யுற யாரிடமாவது ஹலோனு சொல்லிட்டா போதும் என்னை அவங்க கூட சேர்த்து வச்சு பேசிடுவாங்க."
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்திரி ரகுராம். இவர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் பா.ஜ.க ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவரையில் திரைக்கு பின்னால் இருந்த காயத்ரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஃபேம் கொடுத்தது. அதிக கவனம் பெற்ற காயத்திரி ரகுராம் சமீபத்திய நேர்காணலில் அரசியல் தாண்டி , தனது குடும்பம் , திருமணம் என பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில்”நான் சின்ன வயசுல இருந்து டான்ஸ் ஆடுவதை பார்த்துட்டுதான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. கமல்ஹாசன் சார் இப்போ பார்த்தாலும் கூட ஸ்பிலிட் பண்ணுவியானுதான் கேட்பாரு. ஆனால் இப்போதைய காலக்கட்டத்துல எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. ஆனால் நடனம் பிடிக்கும். 16 வயதில் பிரபுதேவா சார் கூட நடித்தேன் . அந்த சமயத்தில் எனக்கு அவர் கூட நடனம் ஆடும் பொழுதெல்லாம் எனக்கு பிரபுதேவா சார் கூட டான்ஸ் ஆடுறோம்னு ஃபீல் இல்லை. அவர் சொல்வதை செய்வேன். அப்படித்தான் கால் தூக்கி அவரது தோள்பட்டை மேல போட சொன்னாரு . நான் பண்ணேன். இன்றைக்கு ட்விட்டர்ல அந்த படத்தை போட்டு கலாய்ப்பாங்க. நீதான் கலை , கலாச்சாரத்தை காப்பாற்ற போறியானு கேட்பாங்க.
நடராஜருடைய போஸ் அது.அதை அநாகரீகமா பார்க்க கூடாது. என்னுடைய 23 வது வயதில் அதர்வாவிற்கு அம்மாவாக நடிக்கிறியானு கேட்டாங்க. நான் சின்ன பொண்ணு எப்படி நடிக்க முடியும். அதனால நடிப்பை விட்டுட்டு நடன இயக்குநராக பணியாற்றினேன்.அப்பாவோட மறைவின் தாக்கம் இன்றைக்கு வரைக்கும் இருக்கு. ஒரு வீட்டில் ஆண் இல்லையென்றால் என்ன மாதிரியான அழுத்தத்திற்கு தள்ளப்படுவீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு காதல் , திருமணம் மேல விருப்பம் இல்லை. கடவுள் , சேவையிலதான அதிக நாட்டம். இந்த சூழல்லதான் நான் கூட வேலை செய்யுற யாரிடமாவது ஹலோனு சொல்லிட்டா போதும் என்னை அவங்க கூட சேர்த்து வச்சு பேசிடுவாங்க. தினமும் அதை சந்திப்பேன்.
அப்போ அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன். எனக்கு திருமணம் ரொம்ப சின்ன பகுதி. வீட்டில் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தாங்க. எங்களை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள சிரமமாக இருந்தது.நாங்க அதிலிருந்து வெளியே வந்துட்டோம் நாங்க. இருவருமே முடிவு செய்துதான் வெளியே வந்தோம். அதனால எனக்கு அது மனதளவில் பெரிய பாதிப்பு இல்லை.எனக்கு விவாகரத்து ஆகும் பொழுது 23 வயது. நான் கோர்ட் உள்ளே போனதுமே செய்திகள்ல போட்டாங்க. அது அந்த வயசுல பாக்குறது ரொம்ப புதுசா இருந்தது. அந்த வயசுலையே எல்லாத்தையும் பார்த்துட்டேன் “ என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.