மேலும் அறிய

Dhanya Balakrishna: ”தொழில் மேல் சத்தியம்; என்னுடைய கருத்தே இல்லை" - மன்னிப்பு கேட்ட தன்யா!

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று நடிகை தன்யா தெரிவித்துள்ளார்.

ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பெங்களூருவை சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா. இவர்  காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள 'லால் சலாம்' படத்தின் ஹீரோயினாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

நடிகை தன்யா சர்ச்சை:

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் CSK vs RCB  அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா பதிவிட்ட ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ”அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்குறீர்கள். நாங்கள் கொடுக்கிறோம்.

மின்சாரத்துக்காக பிச்சை எடுக்குறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா? என்று பதிவிடப்பட்டிருந்தது. 

நடிகை தன்யாவின் ட்வீட் சர்ச்சை கிளப்பியதை  அடுத்து, ” நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்" என கூறியிருந்தார் தன்யா.  இந்த சூழலில், தற்போது லால் சலாம் படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

"என் தொழில் மேல் சத்தியம்"

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து நடிகை தன்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் ... கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்...அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான்.

அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல. நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.

”சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை"

அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே ... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்தவித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.

”தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்கிறேன்"

சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு...” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget