‛போலீசை கூப்பிடுவேன்...’ ஆன்ட்டி என அழைத்ததால் நடிகை அனசுயா பரத்வாஜ் டென்ஷன்!
ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்வேன் என்று ஆன்லைன் ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ்.
தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் நடிகை அனசுயா பரத்வாஜ் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’லைகர்’திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து நடிகை அனுசுயா அந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் விளம்பரத்தின் போது விஜய் தேவரகொண்டா தகாத வார்த்தையைப் பயன்படுத்தி உருவாக்கிய சர்ச்சையை நடிகை நினைவு கூர்ந்துள்ளார். 5 வருடங்கள் ஆகிவிட்டப் பிறகும், இதைப்பற்றி போட்ட ட்வீடால் ஆன்லைன் ட்ரோலிங்கிற்கு ஆளாகிவிட்டார் அனுசுயா.
అమ్మని అన్న ఉసురు ఊరికే పోదు. కర్మ.. కొన్నిసార్లు రావటం లేటవ్వచ్చేమో కాని రావటం మాత్రం పక్కా!!#NotHappyOnsomeonesSadness but #FaithRestored
— Anasuya Bharadwaj (@anusuyakhasba) August 25, 2022
அனசுயாவின் ட்வீட் பல ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது, அந்த ட்வீட் குறித்து ரீ ட்வீட் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரை ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
That's it.... That's the tweet #Aunty #anasuyabharadwaj #anasuyaaunty pic.twitter.com/Qz8kLje0if
— Naveen 🌠 (@Novely_kumar) August 26, 2022
அவரை ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ட்ரோல்களுக்கு அனசுயா, "என்னை "ஆன்ட்டி" என்று அழைக்கும் ஒவ்வொரு அக்கௌண்டையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளேன். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் என்னை அவமதிப்புச் செய்வது தவறு.. இதுவே எனது இறுதி எச்சரிக்கை.." என்று பதிலளித்துள்ளார்.
Here by..taking screenshot of every account abusing me..age shaming me by calling“Aunty”..involving my family into this and I will file a case and take it to a point where you will regret getting to me without any legit reason..this is my final warning..
— Anasuya Bharadwaj (@anusuyakhasba) August 26, 2022
மேலும் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக இன்னும் அவரை ஆன்ட்டி என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.