'இந்த காஃபி குடிக்க அல்ல.. குளிக்க..' காஃபி குளியல் குறித்து போஸ்ட் போட்ட பிகில் நடிகை!
சமீபத்தில் வெளியான லிப்ட் படத்திலும் கவனத்தை ஈர்த்த அம்ரிதா அடுத்தடுத்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி ரீலீஸாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியானது ‘பிகில்’ திரைப்படம்.
கால்பந்தாட்டத்தை அதுவும் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.
View this post on Instagram
ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான். இந்தப் படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்தார் தெத்துப்பல் அழகி அம்ரிதா ஐயர். விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா.
சமீபத்தில் வெளியான லிப்ட் படத்திலும் கவனத்தை ஈர்த்த அம்ரிதா அடுத்தடுத்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். சினிமா ஒருபுறமிருக்க நடிகர் நடிகைகள் சோஷியல் மீடியாவான இன்ஸ்டா மூலமும் பணம் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரங்களை போஸ்டாக போடுவதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர் சினிமா பிரபலங்கள். அப்படியான ஒரு விளம்பரம் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து வைரலாகியுள்ளார் அம்ரிதா.
View this post on Instagram
காபி பாடிவாஷ்க்காக அவர் மாடலாக ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதற்காக கமெண்ட் செய்துள்ள அவரது ரசிகர்கள் சிலர் இப்படியான புகைப்படம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில் அம்ரிதாவுக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்டுள்ள சிலர் இதில் என்ன தவறு இருக்கிறது? இது சாதரணமானது என பதிவிட்டுள்ளனர்.