யாருக்கும், எதற்கும் அஞ்சாத நடிகை அம்மு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வீடியோ!
சீரியல் நடிகை அம்மு அபிராமி வெளியிட்ட வீடியோ ஒன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரிப்போர் ஒரு பக்கம் தெருநாய்களே வேண்டாம் என்பவர்கள் ஒரு பக்கமாக இருந்து தங்கள் பக்க நியாயங்களை உரையாடினார்கள். அப்போது நடிகை அம்மு ராமச்சந்திரன் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதில், நடிகை எந்த மொழியில் பேசும் என்பது குறித்தும் சைகை செய்து காண்பித்தது பேசுபொருளானது. அதேபோன்று மக்கள் மீது அக்கறை இல்லாமல் தெருநாய்களை ஆதரிப்பதாகவும் நடிகை அம்முவை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை வைத்து நிறைய பேர் ஆபாசமாக திட்டுறீங்க. சொல்ல முடியாத வார்த்தைகளாலும் பேசுறீங்க. ட்ரோல் பன்றீங்க ஆனால், அதற்காக பயந்து இந்த வீடியோவில் பேசவில்லை. அதுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். நீயா நானாவில் என்ன நடந்துச்சு என்பதை முதலில் தெரிஞ்சுக்கோங்க. 8 மணி நேரம் எடுக்கப்பட்ட வீடியோவை, வெறும் 45 நிமிடம் எடிட் பண்ணி போட்டிருக்காங்க.
எடிட் செய்யப்படாத அன்சீன் காட்சிகளையும் விஜய் தொலைக்காட்சி வெளியிட வேண்டும். நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தெருநாய்களால் மக்கள் பாதிக்கப்படுவது எங்களுக்கும் தெரியும். தெருநாய்கள் மீது அன்பு காட்ட வேண்டும், தோழமையோடு பழகினால் அந்த பயம் நீங்கிவிடும் என்பதை சொல்வதற்காகத் தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். டிஆர்பி-க்காக ஏன் இப்படி அக்லி கேம் விளையாடுறீங்க என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு லாம் அஞ்ச மாட்டேன் என்று அப்ரூவராக மாறிய அம்மு pic.twitter.com/r0C1nv2JiV
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 1, 2025






















