4 Years of Aadai: 'ஆடையின்றி நடித்த அமலா பால்’ .. தலைகீழாக மாறிய சினிமா வாழ்க்கை.. இன்றோடு 4 வருஷமாச்சு..
நடிகை அமலாபால் நடித்த ஆடை படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த படம் அமலாபாலின் சினிமா கேரியரை தலைகீழாக திருப்பி விட்டதாக இன்றளவும் பலரும் கருதுகின்றனர்.
நடிகை அமலாபால் நடித்த ஆடை படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த படம் அமலாபாலின் சினிமா கேரியரை தலைகீழாக திருப்பி விட்டதாக இன்றளவும் பலரும் கருதுகின்றனர்.
கவனம் பெற்ற ஆடை படம்
தனது முதல் படமான மேயாத மான் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ரத்னகுமாரின் 2வது படமாக வெளியானது ‘ஆடை’ படம். இந்த படத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தொகுப்பாளினி ரம்யா, விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய கவனம் பெற்றது. அதற்கு காரணம் படத்தில் இடம் பெறும் சுமார் 40 நிமிட காட்சிகளுக்கு நடிகை அமலா பால் நிஜமாகவே ஆடையின்றி நடித்தார் என்பது தான்.
படத்தின் கதை
தன்னை ஒரு பெண்ணியவாதியாகக் காட்டிக்கொள்ளும் அமலா பால், தனியார் தொலைக்காட்சியில் 'தொப்பி தொப்பி' என்ற பிராங்க் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். ஒரு விஷயத்தை நிகழ்த்த எந்த எல்லைக்கு செல்லலாம் என சொல்லும் அவர், மது போதையில் தன் தோழியிடம் நிர்வாணமாக செய்தி வாசிப்பதாக சவால் விடுகிறார். மறுநாள் காலை தான் நிர்வாணமாக இருப்பஹை கண்டு அதிர்ச்சியடைகிறார். அவரது நண்பர்களை காணாத நிலையில், தன்னுடைய நிலைக்கு காரணம் என்ன? என்பதை விளக்கியது இப்படம்.
குவிந்த பாராட்டு
கொஞ்சம் கேமரா கோணங்கள் மாறினாலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளாக மாறக்கூடிய இந்த படத்தை எந்த விரசமும் இன்றி அழகாக கொடுத்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இச்சமூகம் எப்படி அணுகுகிறது, பிராங்க் ஷோவால் பாதிக்கப்படுபவர்கள்,பெண் உடல் மீதான அரசியல் என சில முக்கியமான விஷயங்களை இப்படம் முன்வைத்தது.
காணாமல் போன அமலாபால்
கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாத ஒரு கேரக்டர் அமலா பாலுக்கு கிடைத்திருந்தது. ஆடை படம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பாக அமலா பாலுக்கு அமைந்திருந்தது. ஆனால் படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், இந்த படம் தான் அவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான படமாகும், அதன்பிறகு இந்த 4 ஆண்டு காலத்தில் அமலாபால் 2 வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஆனால் படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.