Aditi Shankar: 'நான் என்ன பண்ணாலும் க்ரிஞ்சுன்னு சொல்றாங்க..’ : நேர்காணலில் புலம்பிய அதிதி ஷங்கர்..!
மாவீரன் படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்களை நடிகை அதிதி ஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவீரன் படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்களை நடிகை அதிதி ஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி. அந்த படத்தில் பாடகியாகவும் களம் கண்டார். இதனைத் தொடர்ந்து அதிதி ஷங்கரின் அடுத்தப்படமாக மாவீரன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் மாவீரன் படத்திலும் அதிதி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
சாப்பாட்டுக்காக நடக்கும் சண்டை
இதனிடையே நேர்காணல் ஒன்றில், “எனக்கு சினிமாவில் நடிகை சரிதாவின் நடிப்புத்திறமை என்பது ரொம்ப பிடிக்கும். நான் நடிக்க வந்த காரணமே எங்க அப்பா தான் காரணம்” என அதிதி தெரிவித்தார். அப்போது அவரிடம், உங்கள் உடன்பிறப்புகளுடனான எதற்காக அடிக்கடி சண்டை வரும் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “சாப்பாடுக்காக தான் என் அக்காவுடன் சண்டை நடக்கும். ஒரு உணவகத்துக்காக போய் 100 முறை கேட்டாலும் எதையும் ஆர்டர் செய்ய மாட்டார். ஆனால் நாம ஆர்டர் பண்ணி சாப்பிட்டா நம்மகிட்ட இருந்து எல்லாத்தையும் எடுத்துப்பா. கேக்கவே கடுப்பா இருக்குல. வெளியே இருந்து பார்த்த சின்ன விஷயமாக தான் தெரியும். ஆனால் உடன்பிறப்புகள் இருக்குறவங்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். தம்பியும் அப்படித்தான் பண்ணுவான். சோறு முக்கியம்.
வாரிசு ஆதிக்கம் குறித்து பதில்
அடுத்ததாக உங்களை பற்றிய வதந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் பொய் சொல்லல. அந்த தகவல் ஒரு மாதிரி ஆரம்பிச்சி வேற மாதிரி முடிஞ்சிது. நான் நடிக்கப்போகிறேன் சொன்னபோது, ‘வாரிசு ஆதிக்கம்’ என சொன்னார்கள். ஆனால் விருமன் ரிலீசான பிறகு ‘திறமை உள்ள வாரிசு ஆதிக்கம்’ என முன்னேற்றம் கண்டது.
பல்பு வாங்கிய அதிதி
ஒரு விருந்தினர் ஒருவரை வீட்டிற்கு வந்தார்கள். நான் என்னை ஏதோ படத்தில் ஒப்பந்தம் செய்ய வந்தார்கள் என நினைத்தேன். அதுக்காக மனதிற்குள்‘நம்முடைய வாழ்க்கையில இதுவும் நடக்குதா’ என மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அவரோ அப்பாவை பார்க்க வந்ததாக தெரிவித்தார். எனக்கு செம பல்பா இருந்துச்சு என கூறினார். அப்போது ‘நான் என்ன பண்ணாலும் சோஷியல் மீடியால கிரிஞ்ச்ன்னு சொல்றாங்க’ என அதிதி கூறினார்
மேலும் நான் எங்கப்பா ஷங்கர் இயக்கிய படங்களில் ஜீன்ஸ் படத்தை திரும்ப சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது என தெரிவித்தார்.