ஷாருக்கான் முதல் பகத் பாசில் வரை... புதிதாக லக்சுரியஸ் கார்களை வாங்கிய நடிகர்கள் யார் யார்?
நடிகர்களுக்கு கார்கள் மீது இருக்கும் மோகம் என்றுமே குறைவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக சொகுசு கார் வாங்கிய நடிகர்கள் யார் யார் தெரியுமா?
நடிகர்கள் பலரும் வகைவகையாக சொகுசு கார்கள் வாங்குவதில் என்றுமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். புதிய கார்கள் வாங்குவதும் அதனோடு சேர்ந்து போட்டோஸ் எடுத்து சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் செய்வது என்பது தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆடம்பரமான சொகுசு கார்கள் வாங்கிய பிரபலமான நடிகர்கள் ஒரு சிலரை பற்றி பார்க்கலாம் :
பகத் பாசில் :
மலையாள திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான பகத் பாசில் - நஸ்ரியா தம்பதி அவர்களின் 9வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார்கள். அதை மேலும் சந்தோஷமாக்கும் வகையில் ஆடம்பரமான “லேண்ட் ரோவர் டிஃபென்டர்” கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் ஆன்ரோடு விலை மட்டுமே ரூ.2.70 கோடியாம். இதன் மூலம் கேரள மாநிலத்தில் முதல் பல்வேறு தரமான அம்சங்களை கொண்ட ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ காரை வாங்கிய பெருமையை பெற்றுள்ளார் பகத் பாசில்.
சல்மான் கான் :
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே புல்லட்புரூஃப் டொயோட்டா லேண்ட் குரூசர் எல்சி௨௦௦ வைத்திருந்த நிலையில் புதிதாக நிசான் நிறுவனத்தின் ‘பெட்ரோல் எஸ்யுவி’ காரை தென்கிழக்காசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். இதன் விலை சுமார் 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஷாருக்கான் :
பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிகமான வசூலை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் சுமார் 10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார்.
மகேஷ் பாபு :
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'குண்டூர் காரம்' படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் ரூ.5.4 கோடி மதிப்புள்ள ‘ரேஞ்ச் ரோவர்’ சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார்.
யாஷ் :
கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான நடிகராக யாஷ் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி என்ற லக்சூரி கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி இருந்தார். இதன் விலை சுமார் ரூ. 2.39 கோடி தொடங்கி ரூ. 4.17 கோடி வரை உள்ளது. அதில் யாஷ் ஸ்பெஷல் பதிப்பை வாங்கியிருந்தார் என கூறப்படுகிறது. ஏற்கனவே அவரிடம் பல சொகுசு கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிவின் பாலி :
பிரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நிவின் பாலி. அதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நிவின் பாலி சமீபத்தில் பிஎம்டபிள்யூ 740ஐ காரை வாங்கி இருந்தார்.
மோகன்லால் :
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்கனவே தந்து கராஜில் ஏராளமான சொகுசு மற்றும் ரெட்ரோ கார்களை வரிசையாக வைத்துள்ள நிலையில் ரூ. 4 கோடி மதிப்பிலான புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.