மேலும் அறிய

Dhanush : ஒரு வழியாக நடிகர் விவேக்கின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்... ரசிகர்கள் பாராட்டு

மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் காமெடி கேரக்டரில் விவேக் நடித்திருந்தார்.

நடிகர் விவேக்கின் ஆசையை தனுஷ் நிறைவேற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியானது.  படம் பார்த்த ரசிகர்கள் பலரும் திருச்சிற்றம்பலம் படத்தில்  படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தோழி நமக்கில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது. 

இந்நிலையில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் டிவியில் நடிகை டிடி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது டிடி விவேக்கிடம் Rapid Fire எனப்படும் ரவுண்டில் கேள்விகள் கேட்க அதற்கு அவர் உடனடி பதில் அளித்தார். அப்போது தமிழ் சினிமாவில் நல்லா வரவேண்டிய இயக்குநர் என்றால் யாரை சொல்வீர்கள்? என கேட்க, சட்டென்று திருச்சிற்றம்பலம் பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் பெயரை சொல்கிறார். 

தொடர்ந்து பேசிய விவேக், அவர் அழகான இயக்குநர். மறுபடியும் தனுஷே ஒரு வாய்ப்பு கொடுத்து அவரை கொண்டு வந்து மேலே நிறுத்தணும் என கூறியுள்ளார். முன்னதாக மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் காமெடி கேரக்டரில் விவேக் நடித்திருந்தார். மித்ரன் தனுஷை வைத்து 3 படங்களில் யாரடி நீ மோகினி தவிர குட்டி, உத்தமபுத்திரன் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேபோல் கடைசியாக 2016 ஆம் ஆண்டு படமெடுத்த மித்ரன் கிட்டதட்ட 6 ஆண்டுகள் கழித்து திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.

அதாவது அந்த நிகழ்ச்சியில் விவேக் சொன்னது போலவே தனுஷ் தான் மீண்டும் மித்ரனுக்கு வாய்ப்பளித்து கைதூக்கி விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தனுஷைப் பாராட்டி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget